கண்டிப்பாக CUP அடித்துவிடுவோம்! - உற்சாகமாக சொன்ன SK | Thaai Kizhavi | Sivakarthikeyan
சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா, சிங்கம் புலி, அருள்தாஸ், பால சரவணன், ரெபேக்கா எனப் பலரும் நடித்த படம் `தாய் கிழவி'. இப்படத்தின் 100வது நாள் விழா சில தினங்களுக்கு முன் ஒரு தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய சிவகார்த்திகேயன் "ஸ்க்ரிப்ட் கேட்ட நாளில் இருந்து மிகவும் உற்சாகம் தந்த படம் தாய் கிழவி. சில படங்கள் மட்டும் தான் பயம் இல்லாமல், இதை எப்படி செய்ய போகிறோம் என தயங்காமல் இது சூப்பராக இருக்கும் என்று தோன்றிய கதை இது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட கதை கேட்ட போதும் இப்படி தான் இருந்தது. அதை கேட்டதும், இதனை சீக்கிரம் படமாக வேண்டும், சீக்கிரம் மக்கள் பார்வைக்கு கொண்டு போக வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அதன் பிறகு அப்படியான எண்ணம் தாய் கிழவி கேட்கையில் தான் வந்தது. அது நான் நினைத்த மாதிரியே நடந்ததில் மகிழ்ச்சி.
ராதிகா மேடம் அவரின் மூட்டு வலி பற்றி எல்லாம் கவலைப்படாமல், சிரமம் பார்க்காமல் நடித்துக் கொடுத்தார். அவரை போல தான் இந்தப் படத்தில் நடித்த ஒவ்வொருவரும். இந்தப் படம் 100 நாட்கள் கடந்தது, ஓடிடியில் நிறைய பார்வைகள், தொலைக்காட்சி ரேட்டிங் இவை எல்லாவற்றையும் ஒரு நல்ல முயற்சிக்கு கிடைத்த பயிற்சியாக பார்க்கிறேன்.
நான் இந்த மேடையில் சிவாவை தம்பி என சொல்ல நினைத்தேன். எனக்கு முன்பு பேசியதால் அவர் முந்திக் கொண்டு அண்ணன் என சொல்லிவிட்டார். 20 நாட்கள் ஷுட் செய்ததால் அந்த ஒரு பிணைப்பு ஏற்பட்டுவிட்டது என நினைக்கிறேன். ஆடியோ லாஞ்சில் ஒரு மூடை விதை நெல்லை கொடுத்திருக்கிறேன், அதை விளைச்சல் ஆக்குவேன் என சிவா கூறினார். விளைச்சலை நான் இப்போது பார்க்கிறேன். ஏன் தாய்கிழவி இவ்வளவு வெற்றி பெற்றது என நான் புரிந்து கொண்டேன். நானும் சிவாவும் ஸ்பாட்டில் பேசிக் கொண்டதேகிடையாது . ஆனால் மொத்த குழுவையும் அவர் கட்டுக்குள் வைத்திருப்பதை பார்க்கிறேன். ரேஸில் கடிவாளம் கட்டி செல்லும் குதிரை போல ஓடுகிறேன். கண்டிப்பாக CUP அடித்துவிடுவோம் சிவா." என்றார்.

