\
Madhavan
MadhavanG D Naidu

ஜி டி நாயுடு செய்த மாற்றங்களை சொல்வதே நோக்கம்! - மாதவன் | Madhavan | G D Naidu

என் வாழ்க்கையில் சில நிஜ பாத்திரங்களை நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. ரங்தே பசந்தி, குரு, ராக்கெட்ரி, துரந்தர் போன்ற படங்கள் அப்படி அமைந்தவை.
Published on
Summary

ஜி டி நாயுடு பற்றி நடிப்பதன் மூலம் தான் அவரின் பெருமை தெரிந்ததாக மாதவன் கூறுகிறார். இன்றைய பல தொழில்நுட்பங்களை 80 வருடங்களுக்கு முன்பே, UBER போன்ற கருத்துக்களையும் நாயுடு முயன்றதை நினைவுபடுத்துகிறார். இந்தப் படம், வெறும் வாழ்க்கை வரலாறு அல்ல; அவர் செய்த மாற்றங்களை மக்களிடம் கொண்டு செல்வதே நோக்கம் எனவும், காந்தி படத்தில் பென் கிங்ஸ்லி போல நியாயம் செய்திருக்கிறேன் எனவும் மாதவன் நம்புகிறார்.

என் இயக்குநர் வெற்றி விழாவில் பேச வேண்டிய பேச்சை இங்கேயே பேசிவிட்டார். என் முதல் படம் முடித்த பின்னர் மணி சாருக்கு ஒரு பெரிய மெயில் அனுப்பினேன். அவர் பட வசனங்கள் போல இரண்டே வரியில் பதில் சொன்னார். உன்னுடைய நன்றியை எல்லோருக்கும் சொல்லிக் கொண்டிருக்காதே. நான் உனக்காக எதுவும் செய்யவில்லை என் படம் நன்றாக இருக்க வேண்டும் என தான் செய்தேன். நீயும் அதை தான் செய்தாய். எனவே நானும் இப்போது நன்றி சொல்லப் போவதில்லை. படத்துடைய வெற்றிவிழாவில் நன்றி சொல்கிறேன்.

என் வாழ்க்கையில் சில நிஜ பாத்திரங்களை நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. ரங்தே பசந்தி, குரு, ராக்கெட்ரி, துரந்தர் போன்ற படங்கள் அப்படி அமைந்தவை. சில பாத்திரங்கள் நிஜத்தின் தழுவலாக உருவாக்கும் போது நாம் பயப்பட தேவை இல்லை. ஆனால் உயிருடன் இருக்கும் மனிதர் பற்றி ராக்கெட்ரி எடுக்கையில் ஜாக்கிரதையாக எடுக்க வேண்டும். எனவே இங்கு நான் ஜி டி நாயுடு குடும்பத்துக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். வெறும் ஒரு படம் எடுக்கும் வாய்ப்பு இல்லை இது, ஜி டி நாயுடு பற்றி உலகத்துக்கு சொல்லும் வாய்ப்பை கொடுத்திருக்கிறார்கள். அதை பொறுப்பாக எடுத்தால் தான் மக்களிடம் சென்று சேரும்.

Madhavan
ROLEX படம் எப்போது.. சூர்யா சொன்ன பதில்! | Suriya | Lokesh Kanagaraj

ஜி டி நாயுடு பற்றி எனக்கு இந்தப் படத்தில் நடிக்கும் போது தான் தெரியும். அவர் பற்றி ஏன் இந்த உலகத்துக்கு பல விஷயங்கள் தெரியவில்லை என யோசித்தேன். இப்போது இருக்கும் பல விஷயங்களை அவர் அப்போதே செய்துவிட்டார். UBER என்பதை 80 வருடங்கள் முன்பே அவர் செய்தார். அவர் கொண்டு வந்த மாற்றங்கள் பற்றி சொல்வது தான் எங்களின் நோக்கமாக இருந்தது. காந்தி என்ற படம் சொன்னால் பென் கிங்ஸ்லி நினைவுக்கு வருவதை போல, நான் இந்தப் படத்தில் ஜி டி நாயுடுவுக்கான நியாயத்தை செய்திருக்கிறேன் என நம்புகிறேன். 

Madhavan
ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து விவகாரம்.. ரூ.40 லட்சம் ஜீவனாம்ச கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com