\
Samyuktha
Samyuktha SlumDog - 33 Temple Road

விஜய் சேதுபதி சார் நடிப்பை நேரில் பார்த்தது அழகான அனுபவம்! - சம்யுக்தா | Samyuktha | SlumDog

இந்த படத்தில் விஜய் சேதுபதி சாருடன் இணைந்து நடித்தது மிகவும் மகிழ்ச்சியான அனுபவம். அவரின் ரசிகை நான்.
Published on

தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் பூரி ஜெகன்நாத். இவர் தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் `Slumdog: 33 Temple Road' என்ற தமிழ் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய நடிகை சம்யுக்தா “பூரி ஜெகன்நாத் சாருடன் பணியாற்றியது ஒரு தனித்துவமான அனுபவமாக இருந்தது. ஒரு காட்சியை மிகவும் எளிமையாகவும், அதே நேரத்தில் ஸ்டைலாகவும் இயக்கக்கூடியவர் அவர். இயக்கம் என்பது ஒரு கலை. அதை அவர் மிகவும் இயல்பாக கையாள்கிறார். சரியான நேரத்தில் படப்பிடிப்பை முடித்து, கலைஞர்களிடம் இருந்து சிறந்த நடிப்பை வெளிக்கொணரும் திறமை அவருக்கு இருக்கிறது.

இந்த படத்தில் விஜய் சேதுபதி சாருடன் இணைந்து நடித்தது மிகவும் மகிழ்ச்சியான அனுபவம். அவரின் ரசிகை நான், ரசிகர்கள் திரையில் ஒரு கதாபாத்திரத்தை மட்டுமே பார்க்கிறார்கள். ஆனால் ஒரு இணை நடிகையாக, ஒரு நடிகர் கதாபாத்திரமாக மாறும் அந்த அற்புதமான பயணத்தை நேரில் பார்த்திருக்கிறேன். விஜய் சேதுபதி சார் அந்த மாற்றத்தை மிக அழகாக வெளிப்படுத்துகிறார். அவருடன் பணியாற்றியது எனக்கு மறக்க முடியாத அனுபவம். அவர் மிகவும் அன்பானவர், எளிமையானவர்.

Samyuktha
தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகும் குஷ்பு மகள்! | Avantika Sundar | Khushbu

எங்கள் தயாரிப்பாளர்களுக்கு சார்மி மேடமுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். அவர்கள் இந்த படத்தில் பணத்தை மட்டும் முதலீடு செய்யவில்லை; தங்களது நேரம், உணர்வுகள் மற்றும் முழு அர்ப்பணிப்பையும் முதலீடு செய்துள்ளனர். குறிப்பாக சார்மி மேம், படத்தின் ஒவ்வொரு விஷயத்திலும் நேரடியாக ஈடுபட்டு பணியாற்றியுள்ளார். படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதில் அவர் எப்போதும் அக்கறை கொண்டிருந்தார். அவரது விருந்தோம்பலும், அன்பான அணுகுமுறையும் அனைவரையும் கவர்ந்தது. மேலும் பூரி ஜெகன்நாத் சாருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருப்பதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். படப்பிடிப்பு முடிந்த பிறகு அவருடன் புகைப்படம் எடுக்க மக்கள் காத்திருப்பார்கள். அவரது பெயரையே கொண்டாடும் ரசிகர்களை நான் பார்த்திருக்கிறேன். ஒரு இயக்குநராக அவர் உருவாக்கியிருக்கும் அந்த பிராண்ட் மதிப்பே அவருடைய வெற்றிக்கு சான்று. முழு படத்தையும் திரையில் பார்க்க மிகவும் ஆவலாக இருக்கிறேன். அனைவருக்கும் நன்றி.” என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com