
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் `அரசன்' படத்தில் விஜய் சேதுபதி இணைந்துள்ளதாக அறிவித்துள்ளார் தயாரிப்பாளர் தாணு. ஏற்கெனவே `செக்க சிவந்த வானம்' படத்தில் சிம்பு - விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ளனர். வெற்றிமாறன் - விஜய் சேதுபதி விடுதலை இரு பாகங்களில் பணியாற்றியுள்ளனர். இப்போது வெற்றி - சிம்புவுடன் கைகோர்த்து வடசென்னை யுனிவர்ஸுக்குள் நுழைந்திருக்கிறார் விஜய் சேதுபதி.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா நடித்துள்ள பராசக்தி படத்தின் இரண்டாவது சிங்கிளாக `ரத்னமாலா' பாடல் வெளியானது. இப்பாடலை இசையமைத்து பாடியுள்ளார் ஜி வி பிரகாஷ்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து பெரிய ஹிட்டான படம் `மாநாடு'. இந்தப் படம் வெளியாகி இன்றோடு நான்கு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இது பற்றி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் இயக்குநர் வெங்கட்பிரபு நெகிழ்ச்சியான பதிவுகளை தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவாகியுள்ள `லாக்டவுன்' படத்திலிருந்து `கனா' என்ற பாடல் வெளியாகியுள்ளது. என் ஆர் ரகுநந்தன் இசையில் இப்பாடலை அபர்ணா ஹரிகுமார் பாடியுள்ளார். கோவா திரைவிழாவில் பாராட்டுகளை பெற்ற இப்படம் டிசம்பர் 5ம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.
அஜய் திஷன் நடிப்பில் தயாராகி படம் `பூக்கி'. இதில் ஒரு முக்கியமான வேடத்தில் விஜய் ஆண்டனி நடித்து படத்தை தயாரித்துள்ளார். இந்தப் படம் பிப்ரவரி 26ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அஜித் நடித்த `அட்டகாசம்' படம் நவம்பர் 28ம் தேதி ரீ ரிலீஸ் ஆகவுள்ளது. அதற்கான புதிய டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
அஷ்வின் குமார் இயக்கத்தில் இந்தாண்டு ஜூலை மாதம் வெளியான படம் `Mahavatar Narsimha'. அனிமேஷன் படமான இது 300 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை செய்தது. தற்போது இந்தப் படம் 98வது ஆஸ்கர் விருதுகளில் Best Animated Feature என்ற பிரிவில் போட்டியிடவதற்கான தகுதிப்பட்டியலில் சேர்ந்துள்ளது.
பிரபாஸ் நடிப்பில் சந்தீப் வங்கா இயக்கும் படம் `ஸ்பிரிட்'. இந்தப் படத்தில் இயக்குநர் த்ரிவிக்ரம் மகன் ரிஷி மற்றும் நடிகர் ரவிதேவாவின் மகன் மஹாதேவன் ஆகியோர் உதவி இயக்குநர்களாக இணைந்துள்ளனர்.
ரன்வீர் சிங் நடிப்பில் ஆதித்யா தார் இயக்கியுள்ள படம் `Dhurandhar'. இந்தப் படத்திலிருந்து Ishq Jalakar பாடல் வெளியாகியுள்ளது. படம் டிசம்பர் 5ம் தேதி வெளியாகவுள்ளது.
ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ்பாபு, ப்ரித்விராஜ், ப்ரியங்கா சோப்ரா நடித்து வரும் படம் `வாரணாசி'. இப்படத்தின் அறிவிப்பு வீடியோ சமீபத்தில் வெளியானது. இந்தப் படத்தில் மகேஷ்பாபுவின் சிறு வயது பாத்திரத்தில் நடிகர் சுதீர் பாபு மற்றும் தன் சகோதரி பிரியதர்ஷினி மகன் தர்ஷன் நடிக்க உள்ளதாக தகவல். ஏற்கெனவே Fauzi படத்தில் சிறுவயது பிரபாஸ் ஆகவும் தர்ஷன் நடித்துள்ளாராம்.