Vishal
VishalMagudam

`மகுடம்' பட டப்பிங் துவக்கம்... பரபரப்பாக இயக்கும் விஷால்! | Vishal | Magudam

ஒரு இளம் தாதா மற்றும் சற்று வயதான தலைவர் என விஷால் மூன்று தனித்துவமான தோற்றங்களில் இடம்பெற்றுள்ளார்.
Published on
Summary

விஷால் இயக்கும் முதல் படமான 'மகுடம்' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியுள்ளன. இது அவரது 35வது படம் ஆகும். ரவி அரசுடன் ஏற்பட்ட கருத்து மாறுபாட்டின் காரணமாக, விஷால் தானே இயக்கும் இந்தப் படம், துறைமுகத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. துஷாரா விஜயன், அஞ்சலி, யோகி பாபு முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

நடிகர் விஷால் தற்போது `மகுடம்' படத்தில் நடித்து வருகிறார். இது அவரின் 35வது படமாக தயாராகி வருகிறது. துவக்கத்தில் இந்தப் படத்தை `ஈட்டி', `ஐங்கரன்' படங்களை இயக்கிய ரவி அரசு இயக்கி வந்தார். ஆனால் அவருடன் ஏற்பட்ட கருத்து மாறுபாடு காரணமாக, இப்படத்திலிருந்து ரவி அரசு நீக்கப்பட்டு, படத்தை தானே இயக்குவதாக தீபாவளி அன்று அறிவித்தார் விஷால். இப்போது இது விஷால் இயக்கும் முதல் படமாக வர இருக்கிறது.

தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியுள்ளது. விஷால் டப்பிங் பேச துவங்கும் வீடியோவை வெளியிட்டு இதனை உறுதிப்படுத்தினார். படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் க்ளைமாக்ஸ்-க்கான படப்பிடிப்பும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

படத்தின் கதைக்களம் ஒரு துறைமுகத்தை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது. மேலும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஒரு கார்ப்பரேட் அலுவலக ஊழியர், ஒரு இளம் தாதா மற்றும் சற்று வயதான தலைவர் என விஷால் மூன்று தனித்துவமான தோற்றங்களில் இடம்பெற்றுள்ளார். இந்த அதிரடி படத்தில் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார், அஞ்சலி மற்றும் யோகி பாபு முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படம் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 99வது திரைப்படமாகும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com