தள்ளிப்போகும் சூர்யாவின் ‘கங்குவா’? - இறுதிக்கட்டத்தை நெருங்கிய விக்ரமின் ‘தங்கலான்’- வெளியான தகவல்!

விஷாலின் ‘மார்க் ஆண்டனி’ படமும் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
கங்குவா-தங்கலான்
கங்குவா-தங்கலான்Twitter

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யாவின் 42-வது படமாக உருவாகி வருகிறது ‘கங்குவா’. இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார். யுவி கிரியேஷன்ஸ், ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் இணைந்து தயாரிக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசைமையக்கிறார். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்கிறார். மதன் கார்க்கி வசனங்களை எழுதுகிறார். நிசாத் யூசூப் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். ‘கங்குவா’ படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

Kanguva
Kanguva

3டி தொழில்நுட்பத்தில் படத்தை 10 மொழிகளில் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. கோவா, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23 ஆம் தேதி அன்று இப்படத்தின் கிளிம்ப்ஸ் காட்சிகளுடன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படலாம் என்று தகவல் வெளியானது. அதன்படி, பொங்கலுக்கு இந்தப் படம் வெளியாகலாம் என்று கூறப்பட்டு வந்த நிலையில், சிஜி உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு அதிகமான நாட்கள் தேவைப்படுவதால் வரும் தமிழ் புத்தாண்டுக்கு அதாவது ஏப்ரல் மாதம் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

இதேபோல், இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு விக்ரம் மற்றும் பா.ரஞ்சித்தின் ‘தங்கலான்’ படம் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், இந்தப் படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என்று இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்ற Dakshin South India Media and Entertainment Summit கூட்டத்தில் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவித்திருந்தார். தற்போது அதனை உறுதிப்படுத்தும் வகையில், இன்னும் 10 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு இருப்பதாகவும், இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

படப்பிடிப்பின்போது ஏற்பட்ட காயம் காரணமாக நடிகர் விக்ரம் ஓய்வு எடுத்து வந்த நிலையில், தற்போது அவர் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார்.

Mark Antony Poster
Mark Antony Poster

சூர்யாவின் ‘கங்குவா’, விக்ரமின் ‘தங்கலான்’ படங்கள் அடுத்த வருடத்திற்கு தள்ளிப்போயுள்ளதாக கூறப்படும் நிலையில், விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘மார்க் ஆண்டனி’ படம், ஜூலை 28 ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் மாதம் ராகவா லாரன்ஸ் - கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகியுள்ள ‘சந்திரமுகி 2’ படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com