Vijay
VijayJana Nayagan

`ஜனநாயகன்' ஆடியோ லான்ச் இல்லை... கான்செர்ட்.. புதிய திட்டத்தில் படக்குழு | Jana Nayagan | Vijay

மலேசியாவில் இசைவெளியீட்டு வேலைகளும் பரபரப்பாக துவங்கியுள்ளன. இந்த நிகழ்வை டிக்கெட் வாங்கி பார்க்கும் விதத்தில் நடத்த இருக்கிறார்கள். இதற்கான முன்பதிவுகள் நவம்பர் 28ம் தேதி துவங்கவுள்ளதாம்.
Published on

விஜய் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகி ரிலீசுக்கு தயாராகி வரும் படம் `ஜனநாயகன்'. விஜயின் கடைசி படம் என்பதால் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, ப்ரியாமணி, பிரகாஷ் ராஜ், பாபி தியோல், கௌதம் மேனன் எனப் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பொங்கல் வெளியீடாக ஜனவரி 9ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.

படத்தின் ரிலீசுக்கு இன்னும் 50 நாட்களுக்கு குறைவாகவே இருக்கிறது என்பதால், படம் சம்பந்தப்பட்ட புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் குடியரசு தினம் அன்று வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஜூன் 22ம் தேதி படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டது. நவம்பர் 8ம் தேதி தளபதி கச்சேரி என்ற முதல் சிங்கிள் வெளியானது. இதனைத் தொடர்ந்து `ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா  டிசம்பர் 27ம் தேதி, மலேசியா, கோலாலம்பூரில் Bukit Jalil Stadiumல் நடைபெற உள்ளது என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

Vijay
"தன்ஷிகாவை பாதித்த அந்த பேச்சு..." - விஷால் பகிர்ந்த சம்பவம் | Vishal | Sai Dhanshika

மலேசியாவில் இசைவெளியீட்டு வேலைகளும் பரபரப்பாக துவங்கியுள்ளன. இந்த நிகழ்வை டிக்கெட் வாங்கி பார்க்கும் விதத்தில் நடத்த இருக்கிறார்கள். இதற்கான முன்பதிவுகள் Ticket 2 U என்ற தளத்தில் நவம்பர் 28ம் தேதி துவங்கவுள்ளதாம். வெறும் இசைவெளியீட்டு நிகழ்வுக்கு டிக்கெட் அவசியமா? என்ற கேள்வி எழுந்தால்  அதற்கு ஒரு தகவல் பதிலாக வருகிறது. இது வெறுமனே `ஜனநாயகன்' இசை வெளியீட்டு நிகழ்வாக இல்லாமல், விஜய் இதுவரை நடித்த படங்களில் இருந்து முக்கியமான 30க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி `தளபதி திருவிழா' என்ற பெயரில் ஒரு கான்செர்ட் ஆக நடத்த இருக்கிறார்களாம். இந்த நிகழ்வில் சைந்தவி, திப்பு, அனுராதா ஸ்ரீராம், ஆண்ட்ரியா, சரண், ஹரிசரண், ஹரீஷ் ராகவேந்திரா, யோகி பி, விஜய் யேசுதாஸ் உட்பட பல இசைக் கலைஞர்கள் கலந்து கொண்டு அவர்கள் விஜய் படத்தில் பாடிய பாடல்களை பாட இருக்கின்றனர். இதனோடு சேர்த்து `ஜனநாயகன்' பட பாடல்களை வெளியிட இருக்கின்றனர். எனவே இந்த முறை விஜயின் குட்டி ஸ்டோரிக்கு முன்பு, பெரிய இசை கச்சேரியும் இருக்கிறது.

Vijay
அரசனில் சிம்பு - விஜய் சேதுபதி, எதிர்பாரா கூட்டணி.. `வடசென்னை' கனெக்ட்! | Arasan | VJS | Simbu

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com