வெளியானது விஜய் சேதுபதியின் 50-வது படத்தின் பெயர்!

படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
VJS 50
VJS 50Instagram

விஜய் சேதுபதியின் அடுத்த படமான VJS 50-ன் தலைப்பு நேற்று மாலை வெளியானது.

‘குரங்கு பொம்மை’ பட புகழ் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில், பேஷன் ஸ்டுடியோஸின் சுதன் சுந்தரம் மற்றும் தி ரூட்டின் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து நடிகர் விஜய் சேதுபதியின் 50வது படத்தை தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு ‘மகாராஜா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. நேற்று மாலை இந்த படத்தின் போஸ்டரையும் டைட்டிலையும் தயாரிப்பாளர்கள் வெளியிட்டனர்.

இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் அனுராக் காஷ்யப், நட்டி நட்ராஜ், மம்தா மோகன்தாஸ், அபிராமி, அருள் தாஸ், முனிஷ்காந்த், பாய்ஸ் மணிகண்டன், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர். இப்படத்தின் போஸ்டரில், ‘what goes around comes around’ என்ற டேக்லைனும் இடம்பெற்றுள்ளது.

இப்படத்திற்கு காந்தாரா பட புகழ் அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்ய, பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். நித்திலன் சாமிநாதன் மற்றும் ராம் முரளி இப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளனர்.

மகாராஜா படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- சங்கரேஸ்வரி.S

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com