Vignesh Shivan can do Rajkumar Hirani kind of films in Tamil says Ram
RamLIK

”ராஜ்குமார் ஹிரானி மாதிரி படம் எடுக்கக்கூடியவர் விக்னேஷ் சிவன்!” - ராம் | LIK | Ram | Vignesh Shivan

விக்கிக்கு எதுவும் சுலபத்தில் கிடைக்காது. அவர் யோசிக்கும் கதைகள் அப்படியானவை. வேறு ஏதாவது கதை என்றால், முடித்துவிட்டுப் போயிருக்கலாம். ஆனால், எதிர்காலத்தில் நடக்கும் கதை என அதைப் புதிதாக்கி எடுத்திருக்கிறார்.
Published on

பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள படம் `LIK'. ஏப்ரல் 10ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இயக்குநர் ராம் பேசியபோது, "நான் விக்கியின் நண்பன், ரசிகனும்கூட. அவரை எனக்கு 2012லிருந்து தெரியும். அப்போது நான் பார்த்த விக்கியிலிருந்து இன்று இருக்கும் விக்கி அடைந்திருக்கும் உயரத்தைப் பார்த்து நான் மகிழ்கிறேன். விக்கிக்கு எதுவும் சுலபத்தில் கிடைக்காது. அவர் யோசிக்கும் கதைகள் அப்படியானவை. வேறு ஏதாவது கதை என்றால், முடித்துவிட்டுப் போயிருக்கலாம். ஆனால் எதிர்காலத்தில் நடக்கும் கதை என அதைப் புதிதாக்கி எடுத்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் யாரும் செய்யாத ஒரு கதைப்பரப்பில் சிந்திப்பார். அதுதான் அவரது அடையாளம், அவரது போராட்டத்துக்குக் காரணமுமகூட அதுதான். நான் விக்கியிடம் அடிக்கடி இதைக் கூறுவேன், ராஜ்குமார் ஹிரானி பாணியில் `3 இடியட்ஸ்' மாதிரி, `முன்னாபாய் MBBS' மாதிரி படங்களை தமிழில் எடுக்க யாராவது இருக்கிறார் என்றால் அப்படி எடுக்கக்கூடிய ஒரே இயக்குநர் விக்னேஷ் சிவன்தான்.

Vignesh Shivan can do Rajkumar Hirani kind of films in Tamil says Ram
விக்ரமின் அடுத்த படத்தை இயக்குவது யார்? | Vikram | Chiyaan 63

‘நானும் ரௌடிதான்’ கதையை ஒரு 300 முறையாவது கேட்டிருப்பேன். அத்தனை முறையும் நான் சிரித்திருக்கிறேன். அப்போது அனிருத்தான் அந்தப் படத்தின் ஹீரோ. ஆனால், அதை அனிருத் மிஸ் செய்துவிட்டார். அந்தக் கதையை அன்று தமிழ் சினிமாவின் அத்தனை ஹீரோவிடமும் விக்கி கூறியிருப்பார். ஆனாலும் ஹீரோ அமையவில்லை எனும்போது விஜய் சேதுபதியை முயற்சி செய்யலாம் எனக் கூறினேன்.

Ram
RamLIK

அப்படிதான் அந்தப் படம் அமைந்தது. அதிலிருந்து விக்கிக்கு எல்லாமே மாறியது. அனிருத் வந்தார், நயன் வந்தார். இந்தப் படத்தில் இருப்பதுபோல ஒரு காதல் அவருக்கு அமைந்தது. விக்கி - நயன் காதலித்தார்கள். எவ்வளவுதான் தொழில்நுட்பம் வந்தாலும் காதல் என்பது அழிக்க முடியாத, புரிந்துகொள்ள முடியாத அழகான ஒன்று" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com