\
தி கோட் - வெங்கட்பிரபு - ராஜதுரை
தி கோட் - வெங்கட்பிரபு - ராஜதுரைPT Web

விஜயகாந்த்தின் ‘ராஜதுரை’ Vs விஜய்யின் ‘The G.O.A.T’ - இயக்குநர் வெங்கட்பிரபு கொடுத்த கூல் பதில்!

தி கோட் படம் விஜய்காந்தின் நடித்த ராஜதுரை படம் போல் இருப்பதாக எழுந்த விமர்சனத்துக்கு, வெங்கட் பிரபு விளக்கமளித்துள்ளார்.
Published on

தி கோட் படம் விஜய்காந்தின் நடித்த ராஜதுரை படம் போல் இருப்பதாக எழுந்த விமர்சனத்துக்கு, வெங்கட் பிரபு விளக்கமளித்துள்ளார்.

இது குறித்து அவர் நிகழ்ச்சியொன்றில் பேசுகையில், “கோட் படம் வெளியானது பிறகுதான், அந்தப் படம் கிட்டத்தட்ட ராஜதுரை படத்தின் கதை என்பது எனக்கு தெரியும். சமூக வலைதளங்களில் கருத்துகள் பரவியதை பார்த்துத்தான் அந்தப் படத்தை பார்த்தேன். தெரிவித்தார்.

முன்பே அந்த படத்தை பார்த்திருந்தால் இன்னும் கொஞ்சம் சிறப்பாக கோட் படத்தை எடுத்திருக்கலாம். ராஜதுரை படத்தை எப்படி பார்க்காமல் போனேன் என்று தெரியவில்லை” என்றுள்ளார்.

விஜய்காந்த் நடித்த ராஜதுரை திரைப்படம், கோட்டில் ‘விஜயகாந்த்’ இன்ட்ரோ சீனுடன் நடித்த நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com