Varalaxmi Sarathkumar
Varalaxmi SarathkumarSaraswathi

இயக்குநராக அறிமுகமாகும் வரலட்சுமி சரத்குமார்! | Varalaxmi Sarathkumar | Saraswathi

இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் முதன்மை கதாபத்திரத்தில் நடிக்க பிரபல நட்சத்திரங்கள் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, நவின் சந்திரா ஆகியோர் நடிக்கின்றனர்.
Published on

நடிகை வரலட்சுமி சரத்குமார் இயக்குநராக அறிமுகமாகிறார். சிம்புவுடன் நடித்த `போடா போடி' படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் `தாரை தப்பட்டை', `விக்ரம் வேதா', எனப் பல படங்களில் நடித்தவர், `சண்டைக் கோழி 2', `சர்க்கார்', போன்ற படங்களில் வில்லியாகவும் நடித்து கவனம் ஈர்த்தார். தெலுங்கில் `ஹனுமேன்', `வீரசிம்ஹா ரெட்டி' போன்ற படங்களில் நடித்து டோலிவுட்டிலும் பரிட்சயமான நடிகையானார்.

தற்போது “சரஸ்வதி” என்ற படத்தின் மூலம், வரலட்சுமி சரத்குமார் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தில்  வரலட்சுமி சரத்குமார் முதன்மை கதாபத்திரத்தில் நடிக்க பிரபல நட்சத்திரங்கள் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, நவின் சந்திரா ஆகியோர் நடிக்கின்றனர். 

வரலட்சுமி சரத்குமார் மற்றும் அவரது சகோதரி பூஜா சரத்குமார் இணைந்து தோசா டைரீஸ் என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் மூலம் இந்த முதலாவது தயாரிப்பை தொடங்கியிருப்பதை அறிவித்துள்ளனர். தமன் இசை, A.M.எட்வின் சகாய் ஒளிப்பதிவு, வெங்கட் ராஜன் படத்தொகுப்பு, சுதீர் மச்சர்லா கலை இயக்கம் என்ற தொழில்நுட்ப குழு இப்படத்தில் இணைந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com