Akhanda 2, F1, Man vs Baby, Superman, Vaa Vaathiyaar
Akhanda 2, F1, Man vs Baby, Superman, Vaa VaathiyaarThis Weeks Release

கார்த்தியின் `வா வாத்தியார்' to பாலய்யாவின் `அகண்டா 2' | இந்த வார ஓடிடி, தியேட்டர் ரிலீஸ்

இந்த வாரம் ஓடிடியில் `Man Vs Baby' சீரிஸ் மற்றும் தியேட்டரில் `வா வாத்தியார்', `அகண்டா 2' முதல் 'மகாசேனா' வரை பல வகை படைப்புகள் வெளியாகவுள்ளன.

1. Series: Man Vs Baby (English) Netflix - Dec 11

Man Vs Baby
Man Vs Baby

David Kerr இயக்கத்தில் ரோவன் அட்கின்சன் நடித்துள்ள சீரிஸ் `Man Vs Baby'. 2022ல் வெளியான `Man vs. Bee' கதைக்கு பிறகு ட்ரேவர் சந்திக்கும் அடுத்த சவால் என்ன என்பதே கதை.

2. 3 Roses S2 (Telugu) Aha - Dec 12

3 Roses
3 Roses

ஈஷா ரெபா, ராஷி சிங், குஷிதா நடித்துள்ள சீரிஸ் `3 Roses S2'. விளம்பர நிறுவனத்தை துவங்கும் மூன்று தோழிகள் சந்திக்கும் சிக்கல்களே கதை.

3. Single Papa (Hindi) Netflix - Dec 12

Single Papa
Single Papa

ஷஷாங்க், இஷிதா, நீரஜ் இயக்கியுள்ள சீரிஸ் `Single Papa'. புதிதாக விவாகரத்தான ஒருவர், குழந்தை ஒன்றை தத்தெடுக்கிறார். அதன் பின் என்ன ஆகிறது என்பதே கதை.

4. OTT: The Great Shamsuddin Family (Hindi) Jio Hotstar - Dec 12

The Great Shamsuddin Family
The Great Shamsuddin Family

அனுஷா ரிஸ்வி இயக்கியுள்ள படம் `The Great Shamsuddin Family'. எழுத்தாளர் பனியின் வேலைக்கு தடங்கலாக அவரது குடும்பமே இருக்க, அவர்களை சமாளித்து வேலையை முடித்தாரா என்பதே கதை.

5. Wake Up Dead Man: A Knives Out Mystery (English) Netflix - Dec 12

Wake Up Dead Man A Knives Out Mystery
Wake Up Dead Man A Knives Out Mystery

Knives Out, Glass Onion படங்களின் தொடர்ச்சியாக உருவாகியுள்ளது Wake Up Dead Man. முந்தைய பாகங்களை இயக்கிய Rian Johnson தான் இந்த பாகத்தையும் இயக்கியுள்ளார். இந்த முறை Benoit Blanc தீர்க்கும் மர்மம் எது என்பதே கதை. 

6. Post Theatrical Digital Streaming: Superman (English) Jio Hotstar - Dec 12

Superman
Superman

ஜேம்ஸ் கன் இயக்கிய படம் `Superman'. சூப்பர்மேன் கதையின் மார்டன் வெர்ஷனாக உருவாகியிருக்கிறது.

7. Kaantha (Tamil) Netflix - Dec 12

Kaanthaa
Kaanthaa

செல்வமணி செல்வா இயக்கத்தில் துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, பாக்யஸ்ரீ, ராணா நடித்த படம் `காந்தா'. ஒரு நடிகருக்கும், அவரை வளர்த்துவிட்ட இயக்குநருக்கும் இடையே நடக்கும் ஈகோ மோதலே கதை.

8. Aaromaley (Tamil) Jio Hotstar - Dec 12

Aaromaley
Aaromaley

சாரங் தியாகு இயக்கத்தில் கிஷன் தாஸ், ஷிவாத்மிகா நடித்த படம் `ஆரோமலே'. ஒரு இளைஞனுக்கு காதலை பற்றி ஏற்படும் புரிதல்களே கதை.

9. F1 (English) Apple TV+ - Dec 12

F1
F1

Joseph Kosinski இயக்கி பிராட் பிட் நடித்த படம் `F1'. பிரபல ஃபார்முலா ரேஸ் டிரைவர் ஓய்விலிருந்து திரும்ப வந்து பயிற்சி அளிப்பதே கதை.

10. Theatre: The Devil (Kannada) - Dec 11

The Devil
The Devil

பிரகாஷ் வீர் இயக்கத்தில் தர்ஷன் நடித்துள்ள படம் `The Devil'. மர்மமான ஒரு மனிதனை பற்றிய படம்.

11. Va Vaathiyaar (Tamil) - Dec 12

Va Vaathiyaar
Va Vaathiyaar

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் `வா வாத்தியார்'. எம் ஜி ஆரின் தீவிர ரசிகர், தன் பேரனையும் எம் ஜி ஆர் போலவே வளர்க்கிறார். வளர்ந்த பின் அவன் சிந்தனைகள் என்னவாக மாறுகிறது என்பதே கதை.

12. Mahasenha Volume - 1 (Tamil) - Dec 12

Mahasenha Volume 1
Mahasenha Volume 1

விமல் நடித்துள்ள படம் `மகாசேனா Volume 1'. மலைவாழ் மக்கள் வாழ்வும், அவர்களின் சாமி சிலையை காக்கும் போராட்டமுமே கதை.

13. Maanbumigu Parai (Tamil) - Dec 12

Maanbumigu Parai
Maanbumigu Parai

விஜய் சுகுமார் இயக்கியுள்ள படம் `மாண்புமிகு பறை'. சாதிய பாகுபாடுகள் பற்றி பேசும் படம். 

14. Akhanda 2 (Telugu) - Dec 12

Akhanda 2
Akhanda 2

போயபட்டி ஸ்ரீனு இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்துள்ள படம் `Akhanda 2: Thaandavam'. முரளி கிருஷ்ணாவின் மகளுக்கு வரும் ஆபத்தும் அதை எப்படி அகண்டா சரி செய்கிறார் என்பதே கதை.  

15. Rachel (Malayalam) - Dec 12

Rachel
Rachel

ஹனிரோஸ் நடித்துள்ள படம் `Rachel'. தந்தைக்காக மகளின் பழிவாங்கும் படலமே கதை.

16. Mowgli (Telugu) - Dec 13

Mowgli
Mowgli

சந்தீப் ராஜ் இயக்கியுள்ள படம் `Mowgli'. பழங்குடி இனத்தை சேர்ந்த இளைஞன் தன் காதலியை காப்பாற்ற போராடுவதே கதை.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com