என்னது... பிக்பாஸ் 7-ல் இந்த சீரியல் நடிகரா? வாய்ப்பு கிடைச்சது எப்படி?

தனது தொடர் முயற்சியால எப்படியோ ஒரு சிலரோட சிபாரிசோட பிக்பாஸ் சீசன் 7 ல காலடி எடுத்து வெச்சுடாராம்பா இவரு...
Bigg Boss 7
Bigg Boss 7twitter

இன்றைய காலகட்டத்தில் பொழுதுபோக்குக்கு பஞ்சமே கிடையாது. உலகமே உள்ளங்கையில் என்பதுபோல், எல்லாமே கைக்குள் அடங்கிவிடுகிறது. அதற்கேற்றார்போல, புதிது புதிதாக, சுவாரஸ்யமாக நிறைய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நாள்தோறும் வந்துகொண்டே இருக்கின்றன. அப்படியான ஒரு சுவாரஸ்யமான பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக பிக்பாஸ் 7-ம் இருக்குமா என்பதுதான் இப்போதைய ட்ரெண்டிங் டாப்பிக்!

பிக் பாஸூக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. 6 சீசன்களை வெற்றிகரமாக கடந்து, 7வது சீசன் பிக்பாஸ் விரைவில் வரப்போகிறது. புதுப்புது ஐடியாக்களோடு விஜய் டிவியில் அக்டோபர் ஒன்றாம் தேதியிலிருந்து தொடங்கவிருக்கிறது பிக்பாஸ் 7. இந்த முறை இரண்டு வீடுகள் இருக்குமென ப்ரோமா வெளியாகியுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக சென்னை பூந்தமல்லி பகுதியில் நடப்பதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையே யாரெல்லாம் பிக்பாஸ் 7 போட்டியாளர்களாக இருப்பார்கள் என்ற கணிப்புகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. பொதுவாகவே கடந்த சீசன் பிக் பாஸில் பங்குபெற்ற போட்டியாளர்கள், அடுத்த சீசனுக்கு தங்கள் சார்பில் ஏதாவது ஒரு போட்டியாளரை பரிந்துரை செய்வது வழக்கம். உதாரணமாக, வனிதா விஜயகுமார் சிபாரிசு செய்தவர்தான் ராபர்ட் மாஸ்டர் (இதை அவங்களே சொல்லிருக்காங்க). அந்த வகையில் சீசன் 6-ல் நெருங்கிய தோழிகளாக இருந்த ரட்சிதாவும் ஷிவினும், தங்களுடைய சார்பாக விஜய் டிவியின் ஆபிஸ் சீரியல் மற்றும் ஜீ தமிழின் சத்யா சீரியல், இதோட ‘வேற‌ மாறி ஆபிஸ்’ என்ற வெப் சீரீஸ் போன்றவற்றில் நடித்த விஷ்ணு-வை பிக்பாஸ் 7-க்கு சிபாரிசு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

kamal haasan
kamal haasanBigg Boss Season 7

எப்படி ரட்சிதாவுக்கு விஷ்ணுவ தெரியும்?

ரட்சிதாவும் விஷ்ணுவும், ‘இது சொல்ல மறந்த கதை’ என்ற கலர்ஸ் தமிழின் ஒரு சீரியலில் ஒன்றாக நடித்துள்ளனர். பிக்பாஸ் முடிந்தபிறகு ரட்சிதா, ஷிவின் கலந்துகொள்ளும் பல நிகழ்ச்சிகளில் விஷ்ணுவும் கலந்திருப்பார். சமீபத்தில் ரட்சிதா வாங்கிய காருக்கு விஷ்ணு தன்னுடைய வாழ்த்துகளை சொல்லியிருப்பார்.

ரச்சிதா- விஷ்ணு
ரச்சிதா- விஷ்ணுமுகநூல்

இதில் முக்கியமாக நாம் பார்க்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால் ரட்சிதாவின் கணவர் தினேஷ்க்கு எதிராக ரட்சிதாவின் தோழியான ஜி.ஜி என்பவர் போலீஸில் சமீபத்தில் புகாரொன்று கொடுத்திருந்தார். அந்தப் புகார் மனுவில், விஷ்ணுவின் பெயரும் இருந்தது. அதாவது ‘விஷ்ணுவையும் தினேஷ் மிரட்டினார்’ என்று புகார் கொடுத்திருந்தார் ஜி.ஜி.

அப்படி இப்படி எல்லாம் யோசிச்சு பார்த்தா, எப்படியோ எல்லா சரியா நடந்தா சரிதானே?

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்புலத்தோடு வந்து, பின்புலம் இல்லாமல் போனவர்களும் உண்டு; பின்புலம் இல்லாமல் வந்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர்களும் உண்டு. விஷ்ணு இதில் எந்தவகையென பொறுத்திருந்து பார்ப்போம்!

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com