\
This is my first Tamil film says Ravi Basrur
Ravi BasrurBlast

"முதன்முறையாக தமிழ் சினிமாவுக்கு வருகிறேன்!" - KGF இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் | Ravi Basrur | Blast

ஒவ்வொருவர் இடத்திலும் தனித்திறமை இருக்கும். ஓர் எறும்பிடம்கூட திறமை இருக்கும். அதை நேஷனல் ஜியோகிராபிக் சேனலின் ஒளிப்பதிவாளர் 'ஜூம்' செய்து மக்களுக்கு காண்பித்தால்தான் அதன் திறமை மக்களுக்குத் தெரியவரும்.
Published on

அர்ஜூன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கியுள்ள படம் `ப்ளாஸ்ட்'. இப்படம் மே 28ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் அர்ஜூன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் உட்பட படக்குழுவினரும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் பேசிய இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர், ''தமிழ்ப் படங்களில் பணியாற்றுவதற்காக நிறைய கதைகளைக் கேட்டிருக்கிறேன். ஏதாவது சுவாரஸ்யமான விசயங்கள் இருந்தால், அதில்தான் பணியாற்ற வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். தமிழ் திரை உலகிற்கு வரும்போது முன் தயாரிப்புடன்தான் வருகை தர வேண்டும். ஏனென்றால், தமிழ் சினிமா என்பது கடல் போன்றது. இயக்குநர் சுபாஷ் கதை சொன்னார். அந்த கதையைக் கேட்டபோது இன்ட்ரஸ்டிங்காக இருந்தது. கதையை மிகவும் விரிவாகவும் டீடெய்லாகவும் அதிலும் ஆக்‌ஷன் காட்சிகள் இப்படித்தான் வரும் என்ற விளக்கத்துடனும் சுபாஷ் கதையைச் சொன்னார். அதைக் கேட்டதும் உற்சாகமாகி, இப்படத்தில் பணியாற்ற வேண்டும் என தீர்மானித்தேன்.

புதுமுக இயக்குநர் என்பதால் நானும் ஏதாவது புதிதாகச் செய்ய வேண்டும் என்பதால், இதற்குமுன் நான் செய்த பணிகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, புதிதாக இதில் பல விஷயங்களை முயற்சி செய்து இருக்கிறேன். படமாக்கப்பட்ட காட்சிகளை எனக்கு இயக்குநர் அனுப்பினார். அதைப் பார்த்தவுடன் இவர் புதுமுகமாக இருந்தாலும் வேலை வாங்குவதில் தேர்ச்சி பெற்றவர் என்பதைத் தெரிந்துகொண்டேன். முழுப் படத்தையும் பார்த்த பிறகு, எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது. அவர் கதையைவிட்டு எங்கும் செல்லாமல் அந்தக் கதையை நேர்த்தியாக உருவாக்கியிருக்கிறார். ஒவ்வொரு கலைஞரிடமிருந்து தனக்குத் தேவையானதை வாங்கி அற்புதமாகப் படத்தை உருவாக்கியிருக்கிறார். முதல் படத்திலேயே சுபாஷ் இப்படி கடுமையாக உழைத்து இருப்பதைப் பார்த்து வியந்தேன். அவர் மீது நம்பிக்கை வைத்து ஒத்துழைப்பை வழங்கிய அனைவருக்கும் நன்றி. 

This is my first Tamil film says Ravi Basrur
சிவகார்த்திகேயனின் `சேயோன்' பட பூஜை ஆல்பம்! | Seyon | Sivakarthikeyan | Kamalhaasan

ஒவ்வொருவர் இடத்திலும் தனித்திறமை இருக்கும். ஓர் எறும்பிடம்கூட திறமை இருக்கும். அதை நேஷனல் ஜியோகிராபிக் சேனலின் ஒளிப்பதிவாளர் 'ஜூம்' செய்து மக்களுக்குக் காண்பித்தால்தான் அதன் திறமை மக்களுக்குத் தெரிய வரும். அந்த வகையில், சுபாஷின் திறமையை 'ஜூம்' செய்து பார்த்து வாய்ப்பளித்த ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 'கே ஜி எஃப்' படத்திலிருந்து என் மீது அன்புவைத்து தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறீர்கள்.

Ravi Basrur
Ravi BasrurBlast

அந்த வகையில், புதுமுக இயக்குநர் சுபாஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பிளாஸ்ட்' படத்திற்கும் ஆதரவு தாருங்கள். இந்தப் படத்தைத் திரையரங்கத்திற்கு வருகை தந்து பாருங்கள். அப்போதுதான் இதன் சிறப்பம்சம் உங்களுக்குப் பிடிக்கும். இது தியேட்டரிக்கல் சப்ஜெக்ட். இந்தப் படத்தில் பல சர்வதேச அளவிலான இசைக் கலைஞர்கள் பங்களிப்பினை வழங்கியுள்ளனர். இது என்னுடைய திரை இசைப் பயணத்தில் சிறந்த படம் என்று சொல்வேன்'' என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com