வாழ்க்கையுடன் நெருக்கமான பாத்திரம்! - கிஷோர் | Kishore | Mellisai
கிஷோர், பத்ரா ராபர்ட், ஜார்ஜ் மரியன், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடிப்பில் திரவ் இயக்கியுள்ள படம் `மெல்லிசை'. விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி பேசி இருக்கிறார் நடிகர் கிஷோர்.
“நிறைவேறாத கனவுகள், பொறுப்புகள் மற்றும் நம்பிக்கையுடன் கூடிய சாதாரண வாழ்க்கையைப் பற்றிய கதையாக ‘மெல்லிசை’ என்னிடம் சொல்லப்பட்டது. எந்தவிதமான சமரசங்களும் இல்லாமல் கதை நேர்மையாக இருந்தது. வாழ்க்கையுடன் நெருக்கமாக இருக்கும் இந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது, நான் நடிப்பை ஏன் இவ்வளவு நேசிக்கிறேன் என்பதை எனக்கு நினைவூட்டியது.
இந்தப் படத்தில் உடற்கல்வி ஆசிரியராக நடித்திருக்கிறேன். எங்கள் இயக்குநர், தயாரிப்பாளர்கள், என் சக நடிகர்கள் மற்றும் இந்தப் பயணத்தை உண்மையாக கொடுத்த ஒவ்வொரு தொழில்நுட்ப வல்லுநருக்கும் என்னுடைய நன்றி. இந்தப் படத்தில் அனைவருமே மனப்பூர்வமாக வேலை பார்த்திருக்கிறோம் என்பதே இந்தப் படத்தை இன்னும் ஸ்பெஷலாக்கியது” எனப் பேசியுள்ளார் கிஷோர்.
’மெல்லிசை’ 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை ‘மெல்லிசை’ கொடுக்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

