Rajinikanth
RajinikanthJailer 2

`ஜெயிலர் 2' மூலம் தமிழில் ரீ-என்ட்ரி தரும் நடிகை? | Jailer 2 | Rajinikanth

சிறப்பு தோற்றங்களில் மோகன்லால், சிவராஜ்குமார், பாலகிருஷ்ணா, மிதுன் சக்ரபர்தி, வித்யா பாலன் நடிக்கிறார்கள். தற்போது இந்தப் படத்தில் இன்னொரு முக்கியமான நடிகை இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Published on

ழில்மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு நடுவே உருவாகிவரும் படம் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கும் `ஜெயிலர் 2'. இதில் முக்கிய பாத்திரங்களில் எஸ் ஜே சூர்யா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, மிர்ணா ஆகியோரும் சிறப்பு தோற்றங்களில் மோகன்லால், சிவராஜ்குமார், பாலகிருஷ்ணா, மிதுன் சக்ரபர்தி, வித்யா பாலன் நடிக்கிறார்கள்.  இப்படம் ஜூன் 12ம் தேதி வெளியாகவுள்ளது. தற்போது இந்தப் படத்தில் இன்னொரு முக்கியமான நடிகை இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Rajinikanth
ரஜினி, கமலை UNFOLLOW செய்தாரா லோகேஷ் கனகராஜ்? | Lokesh Kanagaraj | Rajini | Kamal

Bendu Apparao R.M.P என்ற தெலுங்குப் படம் மூலம் சினிமாவில் அறிமுகமான மேக்னா ராஜ், தமிழில் `காதல் சொல்ல வந்தேன்' படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து `உயர்திரு 420', `நந்தா நந்திதா' போன்ற படங்களில் நடித்தார். தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்தவர், 2018ல் கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவை திருமணம் செய்து கொண்டார். 2020ல் எதிர்பாராத சிரஞ்சீவி சார்ஜாவின் மறைவுக்குப் பின் மீண்டு வந்து மறுபடி சில படங்களில் நடிக்க துவங்கினார். 2023ல் இவர் நடித்து வெளியான `Tatsama Tadbhava' பெரிய அளவில் பாராட்டுகளைப் பெற்றது. இப்போது தமிழில் `ஜெயிலர் 2' மூலம் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

Meghana Raj
Meghana Raj

படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் மேக்னா நடிப்பதாகக் கூறப்படும் நிலையில், அவர் ஏற்கனவே படப்பிடிப்புத் தளத்தில் இணைந்துள்ளதாகவும், கடந்த சில நாட்களாக படப்பிடிப்பு நடத்தி வருவதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், இவர் கன்னடத்தில் நடித்துள்ள `Amartha' படம் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது. மேலும் மலையாளத்தில் `Ottakomban' படத்திலும் நடித்து வருகிறார்.

Rajinikanth
ஜேசன் சஞ்சய் இயக்கும் பட தலைப்பு அறிவிப்பு! | Jason Sanjay | Sundeep Kishan

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com