They pronounce the film's title Kara wrongly says Dhanush
DhanushKara

"படத்தின் பெயரை `காரா', `கரா' என தவறாக சொல்கிறார்கள்.." - தனுஷ் கலகல பேச்சு | Dhanush | Kara

இது என் மனதுக்கு நெருக்கமான படம், விக்னேஷ் ராஜா என்ற ஒரு திறமைசாலியால் எடுக்கப்பட்டுள்ளது. அவர் மிகவும் சிறப்பான இயக்குநர்.
Published on

தனுஷ், மமிதா பைஜூ, ஜெயராம், கருணாஸ் எனப் பலரும் நடித்து விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள படம் `கர'. ஏப்ரல் 30ம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், நேற்று மாலை ஹைதராபாத்தில் `கர' படத்தின் தெலுங்கு பாதிப்புக்கான Pre Release நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய தனுஷ் "எனக்கு தெலுங்கு தெரியாது. அதை பேச முயன்று ஏதாவது ஒரு வார்த்தை தவறாக சொல்லி, நான் ட்ரோல் ஆக விரும்பவில்லை. எனவே ஆங்கிலத்திலேயே பேசுகிறேன்.

Kara
Kara

இந்தப் படத்தின் தலைப்பு `கர' என்பது எனக்கு மர்மமாகவே இருந்தது. நிறைய பேர் அதை `காரா', `கரா' என தவறாகவே உச்சரிப்பார்கள். சிலர் தான் `கர' என சரியாக சொல்வார்கள். சரி நீங்கள் எப்படி வேண்டுமானாலும் சொல்லுங்கள்; ஆனால் படத்தை தியேட்டரில் சென்று பாருங்கள். பார்த்துவிட்டு கூரா, கீரா என்று கூட சொல்லிக் கொள்ளுங்கள். இந்தப் படம் ஒரு சாமானிய மனிதன், அசாதாரண சூழலில் சிக்கிக் கொள்ளும் கதையை சொல்கிறது. இது என் மனதுக்கு நெருக்கமான படம், விக்னேஷ் ராஜா என்ற ஒரு திறமைசாலியால் எடுக்கப்பட்டுள்ளது. அவர் மிகவும் சிறப்பான இயக்குநர்.

They pronounce the film's title Kara wrongly says Dhanush
"இந்தப் படத்தில் நான் ஹீரோ இல்லை, கருப்பசாமி தான் ஹீரோ!" - சூர்யா | Suriya | Karuppu

அவருடைய பெயரை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அவர் பற்றி இனி நீங்கள் அடிக்கடி கேள்விப்படுவீர்கள். இன்னும் நிறைய சிறப்பான விஷயங்களை அவர் செய்வார். இந்தப் படத்தை எனக்கு கொடுத்ததற்கு நன்றி விக்னேஷ். நான் முதன் முதலில் உங்களை சந்தித்த போது, படம் செய்வதற்காக அழைக்கவில்லை. நீங்கள் எடுத்த படத்தை (போர் தொழில்) பற்றி பாராட்டவே அழைத்தேன். ஆனால் உங்களுடைய எனர்ஜியை பார்த்த பின்னர், உங்களுடன் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது. இப்படத்தின் மீது மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறேன். இது மிகவும் சிறப்பான விஷயங்களை செய்யும்." என்றார்.

They pronounce the film's title Kara wrongly says Dhanush
மகளின் கருத்துக்கு ஆதரவு குரல் கொடுத்த சத்யராஜ்! | Divya Sathyaraj | Marriage

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com