Thanks for the encouragement Legend sir says Payal Rajput
Payal RajputLeader

"எனக்கு ஊக்கமளித்ததற்கு நன்றி லெஜெண்ட் சார்!" - Payal Rajput | Leader

ரஜினி சார், கமல் சார், ஸ்ரீதேவி மேடம் தமிழ் சினிமாவில் அளப்பரிய சாதனைகளைச் செய்துள்ளார்கள். இன்று அப்படியான ஓர் இடத்தில் நானும் இருப்பதை நினைத்து மகிழ்கிறேன்.
Published on

லெஜண்ட் சரவணன் நடிப்பில் துறை செந்தில் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் `லீடர்'. இப்படம் ஏப்ரல் 3ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய நடிகை பயல் ராஜ்புத், "ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. சென்னைக்கு மீண்டும் வருவதில் மகிழ்ச்சி, சென்னை மக்களின் அன்பு மற்றும் உணவுகள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். தோசை, இட்லி, சாம்பார், வத்தக்குழம்பு எனப் பல விஷயங்கள் சிறப்பாக இருக்கும்.

சினிமா மீது இங்குள்ள மக்கள் வைத்திருக்கும் நேசமும் பிரமிக்கவைக்கும். எப்போதெல்லாம் மேடைக்கு வருகிறேனோ, அதைச் சாதாரணமான இடமாக நினைக்க மாட்டேன். இது புனிதமான இடம். பல லெஜண்டரி நடிகர்கள் தங்கள் முத்திரையைப் பதித்த இடம். ரஜினி சார், கமல் சார், ஸ்ரீதேவி மேடம் தமிழ் சினிமாவில் அளப்பரிய சாதனைகளைச் செய்துள்ளார்கள். இன்று அப்படியான ஓர் இடத்தில் நானும் இருப்பதை நினைத்து மகிழ்கிறேன்.

Thanks for the encouragement Legend sir says Payal Rajput
"கோடிகளை வசூலிக்க வெறுப்பை பேசும் படம் அல்ல!" - மறைமுகமாக Dhurandhar-ஐ சாடிய வெற்றிமாறன் | Neelira

சில மாதங்களுக்கு முன் சரவணன் சாரை, நான் முதலில் சந்தித்தபோது, அவர் கருணையின் உச்சம் என்பதை உணர்ந்தேன். ஜார்ஜியாவில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும் போது, ’எப்படி நீங்கள் உங்களை சுற்றி இருக்கும் எல்லோர் மீதும் அக்கறையாக இருக்கிறீர்கள்?’ என்றேன். அப்போது அவர் சொன்ன பதில், இப்போதும் என் மனதில் இருக்கிறது. ’மக்கள் உங்களை மறக்கலாம், ஆனால் அவர்களை நீங்கள் எப்படி நடத்தினீர்கள் என்பதை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்’ என்றார். எனக்கு ஊக்கமளித்ததற்கு நன்றி சார். இதற்கு முன்னர் அவர் நடித்த படம் பற்றி எனக்கு தெரியாது. ஆனால் ’லீடர்’ படத்தில் அவர் மிகுந்த உழைப்பைப் போட்டிருக்கிறார்.

Payal Rajput
Payal RajputLeader

சில மாதங்களுக்கு முன்னர் துரை செந்தில்குமார் சார் தரப்பிலிருந்து இருந்து போன் வந்தபோது, அவர் படத்தைப் பற்றி கூற ஆரம்பித்தார். அப்போதே நான் சம்மதம் சொல்லப்போகிறேன் என தெரியும். நான் அதிகம் பேசக்கூடிய ஒரு நபர், ஆனால் இவர் பேசவே மாட்டார். ஆனால் நாங்கள் இவ்வளவு நாள் இணைந்து பணியாற்றி இருக்கிறோம் என்பது மகிழ்ச்சி. சுற்றி உள்ள சூழல் எவ்வளவு மோசம் ஆனாலும், அவர் மிகவும் அமைதியாக இருப்பார். அதை அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com