Thambi Ramaiah explains about TN 2026 movie issue
Thambi RamaiahTVK Vijay

”யாரையும் புண்படுத்தும் படம் இல்லை!” - TN 2026 பட சர்ச்சைக்கு தம்பி ராமையா விளக்கம் | Thambi Ramaiah

தவெக தலைவர் தம்பி விஜயுடன் மூன்று படங்களில் நான் நடித்திருக்கிறேன். நட்டி அவரின் இரு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். நிறைய பேர் அவரோடு சம்பந்தப்பட்டுள்ளோம்.
Published on

நட்டி நடராஜ் நடிப்பில் தம்பி ராமையா கதை எழுதி உமாபதி ராமையா இயக்கியுள்ள படம் `TN 2026'. ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி சர்சையானது. டீசரில் விஜய்போல தோற்றத்தில் நட்டி வருவதாகவும், விஜயின் அரசியல் வருகையை கேலிசெய்யும் விதத்திலும் இந்தப் படம் இருக்கும் எனவும் பலரும் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று மாலை நடந்தது.

அதில் பேசிய தம்பி ராமையா, "எந்த ஒரு விஷயத்திலும் யார் மனதும் புண்படக்கூடாது என அடுத்தவர் இடத்திலிருந்து சிந்திக்கும் மெல்லிய மனதுக்கு சொந்தக்காரன் நான். அப்படி இருக்கக்கூடியவன் இந்தக் கதையை எழுதும்போது யார் மனதையும் சங்கடப்படுத்தக் கூடாது என நினைத்துதான் எழுதினேன். தவெக தலைவர் தம்பி விஜயுடன் மூன்று படங்களில் நான் நடித்திருக்கிறேன். நட்டி, விஜயின் இரு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். நிறைய பேர் அவரோடு சம்பந்தப்பட்டுள்ளோம். டீசர் வந்தது, அதில் ஒரு குறிப்பிட்ட லுக்கை மட்டும் பார்த்துவிட்டு, தவறாக மாறிவிடுமோ எனப் பதறிவிட்டார்கள். என்னுடைய வயதுக்கு நான் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இப்படத்தின் பத்திரிகையாளர் காட்சி பார்த்த பின்னர் இதற்கு நீங்களே தீர்ப்பு சொல்லுவீர்கள். 10ஆம் தேதி மக்களும் பார்த்துவிட்டு சொல்லுவார்கள்.

Thambi Ramaiah explains about TN 2026 movie issue
தெறியான ஆக்ஷன், விஸ்வாசமான செண்டிமெண்ட் பேசும் லீடர்! | Leader Review | Legend Saravanan

எல்லாக் கட்சிகளிலும் எனக்கு தம்பிமார்கள் இருக்கிறார்கள். அத்தனை பேருக்கும் பதில் சொல்ல கடமைப்பட்டவன் நான். எனது வாழ்க்கை என்றால், நான் ரிஸ்க் எடுக்கலாம். ஆனால் என் மகனுடைய வாழ்க்கை என்று வரும்போது பொறுப்பு அதிகமாக இருக்கிறது.

Thambi Ramaiah
Thambi RamaiahTVK Vijay

தம்பி ஆதவ் அர்ஜூன்.... உங்களுடைய வாழ்க்கை கதையை ஒரு மேடையில் பேசியதை கேட்டு நானே கண் கலங்கிப்போனேன். கேட்ட தகவல்களை மட்டும் வைத்துக் கொண்டு நீங்கள் ஒரு முடிவுக்கு வந்துவிடாதீர்கள். நீங்கள் சங்கடப்படும் வகையில் இந்தப் படம் ஒரு நூல் அளவுகூட இருக்காது. படம் பார்த்துவிட்டு, இதையா எதிர்த்தோம் என நீங்களே எனக்கு போன் செய்வீர்கள்" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com