Vijay
VijayTVK

தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு துணை இருக்க எதிர்பார்க்கிறோம்! - TFAPC | TVK | Vijay

தனித்து போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே, தனிப்பெரும் வெற்றியை பெற்று வரலாற்று சாதனையை புரிந்துள்ளார். புரட்சி தலைவர் எம்ஜிஆர்-க்கு பின், சினிமாவிலிருந்து அரசியல் சென்று, வெற்றி அடைந்த மாபெரும் சாதனையாளராக இன்று தளபதி விஜய் உருவாகியிருக்கிறார்.
Published on
Summary

சினிமாவை விட்டு இரண்டு ஆண்டுகளில் அரசியலுக்கு வந்த விஜய், தனித்து போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழ் அரசியலில் புதிய சகாப்தம் தொடங்கியுள்ளதாக தயாரிப்பாளர் சங்கம் கூறியுள்ளது. தமிழ் சினிமாவுக்கு இது இழப்பாக இருந்தாலும், தமிழ்நாட்டுக்கு வரப்பிரசாதமாக மாறியதாகவும், புதிய அரசு திரைப்படத் துறையின் பிரச்சனைகளை தீர்த்து வளர்ச்சிக்கு துணை நிற்கும் எனவும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இதற்கு திரைத்துறையினரும், திரைத்துறை சங்கங்களும் வாழ்த்தி வரும் வேளையில் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் வாழ்த்தை வெளியிட்டது.

அந்த வாழ்த்தில் "தளபதி விஜய் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள். தளபதி விஜய், நடிகராக மாபெரும் வெற்றிகள் பல கண்டு, வசூல் மன்னனாக தமிழ் சினிமாவில் பல வருடங்கள் கொண்டாடப்பட்டு வந்தவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு சினிமாவை விட்டுவிட்டு அரசியலில் அடியெடுத்து வைத்த போது, தமிழ் சினிமாவிற்கு அது பெரிய இழப்பாக அனைவராலும் பார்க்கப்பட்டது.

ஆனால், அது தமிழ் நாட்டுக்கே வரப்பிரசாதமாக மாறி இன்று தனித்து போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே, தனிப்பெரும் வெற்றியை பெற்று வரலாற்று சாதனையை புரிந்துள்ளார். புரட்சி தலைவர் எம்ஜிஆர்-க்கு பின், தமிழ் சினிமாவிலிருந்து அரசியல் சென்று நேரடியாக களம் கண்டு, வெற்றி அடைந்த மாபெரும் சாதனையாளராக இன்று தளபதி விஜய் உருவாகியிருக்கிறார். திரு விஜய் அவர்களின் இந்த வெற்றியை இன்று உலகமே கொண்டாடுகிறது அந்த கொண்டாட்டத்தில் தமிழ் சினிமாவை சார்ந்த அனைவரும் கலந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். திரு விஜய் அவர்கள், தமிழ் நாட்டின் முதலமைச்சராக பதவியேற்று, ஒரு சிறப்பான ஆட்சியை மக்களுக்கு கொடுப்பார் என்று கோடிக்கணக்கான மக்களிடம் எதிர்பார்ப்பு உள்ளது. 

TFAPC
TFAPC
Vijay
”முதல்வர் ஸ்டாலின் தோல்வி மனதை பிசைகிறது..” - மாரி செல்வராஜ்

அதே போல் தமிழ் சினிமாவிலிருந்து வந்து பல சாதனனைகளை புரிந்து, இன்று அரசியல் உலகிலும் பல சாதனனைகள் புரிய தொடங்கியுள்ள திரு.விஜய் தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு பல விதங்களில் துணை இருப்பார் என்று எதிர்பார்க்கிறோம். அவரின் தலைமையில் உருவாகும் புதிய அரசு, தமிழ் சினிமாவில் தற்போது உள்ள பிரச்சனைகளை களைந்து ஒரு சிறப்பான எதிர்காலத்தை இந்த துறையில் உள்ள அனைவருக்கும் உருவாக்குவார்கள் என்று பெரிதும் நம்புகிறோம். தமிழ் நாட்டு அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியுள்ள திரு விஜய் அவர்கள், முதலமைச்சராக மாபெரும் சாதனைகளை செய்து மக்கள் மனதில் நீங்கா இடம்பிடிக்க தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

Vijay
”உங்களுடைய சித்தாந்தங்களும், வெற்றுப் பேச்சுகளும்..” விஜய்க்கு பாடகர் ஸ்ரீநிவாஸ் வாழ்த்து!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com