\
Tamil Video Game Son of Thanjai
Madhan KarkySon of Thanjai

`Son of Thanjai' தமிழில் உருவான வீடியோ கேம்! | Madhan Karky

இந்த கேம் தமிழ் மற்றும் ஆங்கில வசன வரிகளுடன் வெளியிடப்பட உள்ளது. முதல் முறையாக, உலகெங்கிலும் உள்ள விளையாட்டாளர்கள் முழுக்க முழுக்க தமிழில் பேசப்படும் ஒரு கேமை விளையாட உள்ளனர்.
Published on

கேமிங் உலகம் பெரிய வரவேற்பு பெற்று வளர்ந்து வரும் அதே வேளையில், இந்திய கேமிங் துறையும் தனது அடுத்த அடிகளை எடுத்துவைத்து வருகிறது. அப்படி சென்னையை மையமாக கொண்ட ஸ்டூடியோவான அயலெட் ஸ்டூடியோஸால் உருவாக்கப்பட்ட `Son of Thanjai' என்ற விளையாட்டு Xbox Series X|S மற்றும் PS5 தளங்களில் வெளிவரவுள்ளது. `Son of Thanjai' விளையாட்டின் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்களை தமிழ்த் திரையுலகில் மிகவும் கொண்டாடப்படும் எழுத்தாளர்களில் ஒருவரான கவிஞர் மதன் கார்க்கி எழுதியுள்ளார்.

’எந்திரன்’, ’பாகுபலி’ போன்ற வெற்றிப் படங்கள் உள்பட 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் 1000-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கான பணி புரிந்த மதன் கார்க்கி, இதன்மூலம் கேமிங் உலகில் அடி எடுத்து வைத்துள்ளார். அரண்மனையில் உல்லாசமாக வாழும் சோழ இளவரசன் விண்ணேந்திரனின் தந்தை மரணப் படுக்கையில் இருக்க, எதிரிகள் நெருங்கி வர, அரசு வீழ்ச்சியின் விளிம்பில் நிற்கிறது. இந்தச் சூழலில் தன் மகனை சாதாரண மனிதனாக சமூகத்துக்குள் அனுப்பும் ஒரு கடினமான முடிவை எடுக்கிறார் மன்னர். அங்கு இந்த இளவரசன், உழவர்கள், வணிகர்கள் மற்றும் மக்களின் நம்பிக்கையை வென்ற பிறகே அவர்களை நாட்டை ஆள முடியும். இதன் பின் என்ன ஆகிறது என்பதே கதை.

இந்த கேம், தமிழ் மற்றும் ஆங்கில வசன வரிகளுடன் வெளியிடப்பட உள்ளது. முதல்முறையாக, உலகெங்கிலும் உள்ள விளையாட்டாளர்கள் முழுக்க முழுக்க தமிழில் பேசப்படும் ஒரு கேமை விளையாட உள்ளனர். சென்னையில் உள்ள அயலெட் ஸ்டூடியோஸின் 30 பேர் கொண்ட குழுவால் உருவாக்கப்பட்ட இந்த கேம், சோழ காலத்தின் நெல் வயல்கள், கடலோரத் துறைமுகங்கள், அடர்ந்த காடுகள் மற்றும் வறண்ட எல்லைப் பகுதிகளை மீள் உருவாக்கம் செய்துள்ளது. இந்த விளையாட்டின் அறிமுக ட்ரெய்லர் இப்போது வெளியாகியுள்ளது.

Tamil Video Game Son of Thanjai
"அபூர்வ சகோதரர்கள் படத்துல அப்பு ரோல் பண்ண TRICK..." - கமல்ஹாசன் பகிர்ந்த ரகசியம்! | Kamalhaasan
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com