Tamil Film Producer Council New Policy
Tamil Film Producer Council TFPC

Revenue Share முறை, OTT ரிலீஸ், அடையாள வேலை நிறுத்தம்! - தயாரிப்பாளர் சங்கம் அதிரடி தீர்மானங்கள்

தமிழ்நாட்டில் உள்ள தயாரிப்பாளர்களுக்கு மட்டும் முன்னுரிமை அளித்து படம் நடிக்க வேண்டும். தயாரிப்பாளர்களின் நஷ்டங்களில் பங்கு கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே நடைபெற்ற பொதுக்குழுவில் முடிவெடுத்து நடிகர் சங்கத்திற்கு தெரிவிக்கப்பட்டது.
Published on

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று  (26.04.2026) சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்க தலைவராக தமிழ்குமரன் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றதற்கு பிறகு நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டம் இதுவாகும். இந்த கூட்டத்தில் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Tamil Film Producer Council New Policy
"இந்தப் படத்தில் நான் ஹீரோ இல்லை, கருப்பசாமி தான் ஹீரோ!" - சூர்யா | Suriya | Karuppu

சிறிய முதலீட்டில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் மானியத்தொகை கடந்த 10-வருட வழங்காமல் நிலுவையில் உள்ளது. அந்த மானியத் தொகையினை புதியதாக பதவியேற்க இருக்கும் தமிழ்நாடு அரசு உடனடியாக வழங்கிட வழிவகை செய்திட வேண்டும் என்று இந்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

சங்கம் தமிழ்த் திரைப்பட மறுசீரமைப்பு குறித்து தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் தென்னிந்திய திரைப்படத்தொகுப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தயாரிப்பு நிர்வாகிகள் சங்கம், ஆகிய சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் புதிய ஒப்பந்தத்தை கடைபிடிக்க வேண்டும் என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

லாப தமிழ் சினமாவில் தற்போது OTT மற்றும் சாட்டிலைட் வியாபாரம் சரிந்து வரும் இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஆந்திரா மாநிலத்தில் உள்ளது போல நடிகர்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் Revenue Share முறையில் தமிழ்நாட்டில் உள்ள தயாரிப்பாளர்களுக்கு மட்டும் முன்னுரிமை அளித்து படம் நடிக்க வேண்டும். தயாரிப்பாளர்களின் நஷ்டங்களில் பங்கு கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே நடைபெற்ற பொதுக்குழுவில் முடிவெடுத்து நடிகர் சங்கத்திற்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளமல் உள்ளார்கள். மேலும், நடிகர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்திடவும் வரவில்லை. ஆந்திராவில் உள்ள தயாரிப்பாளர்கள் அங்குள்ள நடிகர்களால் பாதுகாக்கப்படுகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் தற்போது இனி விரல்விட்டு திரைப்படங்கள் எடுக்க தயங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இனிவரும் காலங்களில் மீடியம் மற்றும் பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் Revenue Share-முறையில் மட்டுமே தயாரிப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விஷயத்தினை சினிமாத்துறையில் உள்ள அனைவரின் கவனத்திற்கு கொண்டு சேர்க்கும் வகையில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்யவும். தொடர்ந்து இதே போக்கை நடிகர் சங்கம் கடைபிடிக்குமானால், தொடர் வேலை நிறுத்தம் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட நடப்பு விநியோகஸ்தர்கள் சங்கம் ஆகியோர் இணைந்து, தமிழ்த் திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிட வேண்டுமென்றால், அந்தந்த திரைப்படங்களை 8-வாரங்களுக்கு OTT-வெளியிட மாட்டோம் என்று தயாரிப்பாளர்களை நிர்பந்தம் செய்து கடிதம் வாங்கி வருவதை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம். மேற்படி விஷயம் குறித்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் ஒன்றினைந்து வருகிற 10.05.2026 அன்று கலந்தாய்வு கூட்டம் நடத்தவுள்ளார்கள். அக்கூட்டத்தில் நான்கு மாநில தயாரிப்பாளர்களும் சேர்ந்து, குறிப்பிட்ட தேதியை தீர்மானித்து, அந்த தேதியிலிருந்து, நான்கு மாநிலங்களிலும் எந்த திரைப்படங்களையும் வெளியிடுவதில்லை என்ற முடிவினை எடுக்கவுள்ளார்கள். அந்த முடிவுக்கு பொதுக்குழு ஆதரவு தெரிவித்து ஏகமனதாக ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள், சங்கத்திற்கு தெரியாமல் OTT சம்பந்தமாக கடிதம் அளித்தார்கள் என்றால் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளருக்கு தமிழ்த் திரையுலகம் தொழில் ஒத்துழைப்பு வழங்காது என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் தமிழ்சினிமா செய்திமலர் என்ற புத்தகம் வரும் மாதத்திலிருந்து நமது சங்கம் மூலம் நடத்தப்படும் சங்கத்தின் அன்றாட நடவடிக்கைகள் அனைத்து உறுப்பினர்களுக்கும் மாதாமாதம் தெரிவிக்கப்படும். அதற்கு பொதுக்குழு ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. அதே போல சங்கத்தின் சார்பில் Youtube Channel ஆரம்பிக்கப்படும் அதன் மூலம் தயாரிப்பாளர்கள் தங்களது சினிமா விளம்பரங்கள் செய்யலாம் அதற்கு பொதுக்குழு ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

Tamil Film Producer Council New Policy
"இந்தப் படத்தில் நான் ஹீரோ இல்லை, கருப்பசாமி தான் ஹீரோ!" - சூர்யா | Suriya | Karuppu

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com