ஷுட்டிங் இடைவெளியில் தாயை சந்தித்த விஜய் - நேபாளம் சுற்றுப்பயணத்தில் அஜித்; வைரலாகும் வீடியோ!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் விஜய் ஆகியோரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
அஜித்-விஜய்
அஜித்-விஜய்ட்விட்டர்

அஜித் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் பொங்கலை முன்னிட்டு வெளியான திரைப்படம் ‘துணிவு’. இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. சொல்லப்போனால் இந்தப் படம், நடிகர் அஜித்திற்கு நல்ல கம்பேக் கொடுத்தது என்றே சொல்லலாம். அவரது ரசிகர்களை மிகவும் கவர்ந்த ‘துணிவு’ படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளதாக முன்பு அறிவிப்பு வெளியானது. இதனை லைகா நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது.

அஜித்-விக்னேஷ் சிவன்
அஜித்-விக்னேஷ் சிவன்

ஆனால், சில காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டதாகவும், இதனைத் தொடர்ந்து அஜித்தின் 62-வது படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை படக்குழு தரப்பிலிருந்து வெளியாகாத நிலையில், தற்போது அஜித் நேபாளத்தில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வருகிற மே 1-ம் தேதி அவரது பிறந்தநாள் என்பதால் அன்று 62-வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

62-வது படம் முடித்தப் பின்னரே நடிகர் அஜித் பைக் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், புதிய படம் குறித்த அறிவிப்பு காலதாமதம் ஆகி வருவதால், மீண்டும் பைக் சுற்றுப் பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில், நேபாளத்தில், உணவகம் ஒன்றில் சமையல் கலைஞர்களுடன் இணைந்து நடிகர் அஜித் சமையல் செய்வதற்கு உதவி புரியும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

இதேபோல், விஜய்க்கும், அவரது பெற்றோருக்கும் இடையே பிரச்னை என்று பேசப்பட்டு வரும் நிலையில், ‘லியோ’ படப்பிடிப்பின் இடைவெளியில் தனது தாய் ஷோபா சந்திரசேகரை, நடிகர் விஜய் சந்தித்த புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய உள்ளது. வருகிற அக்டோபர் மாதம் 19-ம் தேதி படம் வெளியாக உள்ளதால், அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அஜித் மற்றும் விஜய் ஆகியோரின் படத்தின் அப்டேட் வெளிவருகிறதோ, இல்லையோ, தமிழ் திரையுலகின் இருபெரும் நட்சத்திரங்களான இவர்களின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களால் அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

அஜித்-விஜய்
‘KisiKa Bhai KisiKi Jaan’.. ‘வீரம்’ படத்தின் இந்தி ரீமேக் வசூல் எப்படி? அஜித்தை விஞ்சினாரா சல்மான்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com