Suriya, Karuppu
SuriyaKaruppu

U/A சான்றிதழ், விரைவில் ட்ரெய்லர்... கருப்பு அப்டேட்ஸ்! | Karuppu | Suriya | R J Balaji

வழக்கறிஞர் வேடத்தில் சூர்யா நடித்துள்ள இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Published on

சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள படம் `கருப்பு'. இப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ், யோகிபாபு எனப் பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் மே 14ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இப்படத்திற்கு திரைப்பட சான்றிதழ் கிடைத்துள்ளது.

Suriya, Karuppu
"சரித்திர நாயகனாக உருவெடுத்துள்ளார்!" - தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் | Vijay | TVK

வழக்கறிஞர் வேடத்தில் சூர்யா நடித்துள்ள இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போது இப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூர்யா உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டு பேசினார்.

விரைவில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் எனவும் ஆர் ஜே பாலாஜி அறிவித்திருந்தார். இப்படத்துக்கு பின் ஜூலை மாதம் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள `விஸ்வநாத் & சன்ஸ்' படம் வெளியாகவுள்ளது. அடுத்ததாக `ஆவேசம்' இயக்குநர் ஜீத்து மாதவன் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. பல ஆண்டுகளாக ஹிட் எதுவும் அமையாததால் சூர்யாவின் அடுத்த படங்களை மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

Suriya, Karuppu
”உங்களுடைய சித்தாந்தங்களும், வெற்றுப் பேச்சுகளும்..” விஜய்க்கு பாடகர் ஸ்ரீநிவாஸ் வாழ்த்து!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com