Suriya
SuriyaGVM

"எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி" - நெகிழ்ச்சியாக பேசிய சூர்யா | Suriya | GVM

மேடையில் ஏறி அஞ்சல பாடலுக்கு நடனமும் ஆடினார் சூர்யா. அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
Published on
Summary

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய 'மின்னலே' படத்தின் 25 ஆண்டு விழாவில் சூர்யா நெகிழ்ச்சியுடன் பேசினார். கௌதம் மேனன் போன்ற இயக்குநர்கள் இல்லையென்றால் தாம் இல்லை எனக் கூறிய அவர், 'காக்க காக்க' படத்தின் மூலம் கிடைத்த அன்புக்கும் மரியாதைக்கும் நன்றி தெரிவித்தார். ரசிகர்களின் ஆதரவுக்கு தலை வணங்கினார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் கௌதம் வாசுதேவ் மேனன். தமிழில் பல முக்கியமான படங்களை கொடுத்த இவர் தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் படம் இயக்கியுள்ளார். இவர் இயக்கிய முதல் படமான `மின்னலே' வெளியாகி கடந்த பிப்ரவரி 1ம் தேதியோடு 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இதனை கொண்டாடும் விதமாக `என்னோடு வா வீடுவரைக்கும்' என்ற இசை கச்சேரி ஒன்றை பிப்ரவரி 1ம் தேதி நடத்தினார். அதில் சூர்யா, ஜோதிகா, த்ரிஷா உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கலந்து கொண்டதோடு மேடையில் ஏறி அஞ்சல பாடலுக்கு நடனமும் ஆடினார் சூர்யா.

Suriya
ஜனநாயகனும், லீடரும் ஒரே கதையா? - லெஜெண்ட் சரவணா பளிச் பதில் | Leader | Legend Saravanan

அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும் கௌதம் பற்றி பேசிய சூர்யா "இவர்கள் (இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்) எல்லாம் பிரம்மாக்கள் . இவர்கள் இல்லையென்றால் நாங்கள் இல்லை. உங்களுடைய படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி.

எனக்கு கிடைத்த அன்பும், மரியாதையும் உச்சத்திற்குப் போனதற்கு 'காக்க காக்க' படமும் ஒரு காரணம். அதே அன்பையும் மரியாதையையும் இப்போது வரைக்கும் கொடுத்துக் கொண்டிருக்கக்கூடிய ரசிகர்களுக்கு தலை வணங்குகிறேன்" என்று கூறியுள்ளார்.

Suriya
எப்ஸ்டீன் ஃபைல்ஸ்| ’கடவுள் கற்பனை, அழகான பெண்கள் நிஜம்..’ சிக்கிய இந்தியர்? - சின்மயி போட்ட பதிவு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com