\
Suriya sung a song for Vishwanath & Sons
SuriyaVishwanath & Sons

அடுத்து சூர்யா பாடிய பாட்டு.. விஸ்வநாத் & சன்ஸ் UPDATE | Vishwanath & Sons | Suriya

இப்படத்தின் முதல் சிங்கிளாக `பட்டாம்பூச்சி' பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது விரைவில் அடுத்த பாடல் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ்.
Published on

சூர்யா நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம், ‘விஸ்வநாத் & சன்ஸ்'. சூர்யாவின் 46ஆவது படமான இதில் மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள்  இணைந்து நடித்துள்ளனர். `கருப்பு' படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டானதைத் தொடர்ந்து, சூர்யாவின் அடுத்த படம் மீது பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இப்படத்தின் முதல் சிங்கிளாக, `பட்டாம்பூச்சி' பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது விரைவில் அடுத்த பாடல் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ். இந்தப் பாடலை சூர்யா பாடியுள்ளார் எனவும், கென் கருணாஸ் இப்பாடலை எழுதியுள்ளதாகவும் குறிப்பிட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு முன்பு, ’அஞ்சான்’ படத்தில் `ஏக் தோ தீன்', ’பார்ட்டி’ படத்தில் `சாரே', ’சூரரைப்போற்று’ படத்தில் `பருந்தாகுது', ’ரெட்ரோ’ படத்தில் `Love Detox' போன்ற பாடல்களை தொடர்ந்து சினிமாவில் சூர்யா பாடும் ஐந்தாவது பாடல் இது.

’வாத்தி’ மற்றும் ‘லக்கி பாஸ்கர்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இப்படத்தை இயக்கியுள்ளார் என்பதால், படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. இப்படம் முன்பு ஜூலை மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி  வெளியாகிறது. 

Suriya sung a song for Vishwanath & Sons
சுவாரஸ்யமான டார்க் காமெடியா இந்த `கான் சிட்டி'? | Con City Review | Arjun Das | Anna Ben | Yogi Babu
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com