கங்குவா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்@StudioGreen2 twitter
கோலிவுட் செய்திகள்
”நலமா”.. மிரட்டல் லுக்கில் சூர்யா - கிளிம்ப்ஸ் வீடியோவை அடுத்து வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
சூர்யாவின் ‘கங்குவா’ திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் காட்சிகள் யூட்யூப் தளத்தில் வெளியான 19 மணிநேரத்தில் 10 மில்லியன் (1 கோடி) பார்வையாளர்களை பெற்றுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யாவின் 42-வது படமாக உருவாகி வருகிறது ‘கங்குவா’. இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார். யுவி கிரியேஷன்ஸ், ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் இணைந்து தயாரிக்கிறது.
3டி தொழில்நுட்பத்தில் படத்தை 10 மொழிகளில் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்தது. இந்நிலையில், சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் கிளிம்ப்ஸ் காட்சிகள் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசைமையக்கிறார். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்கிறார். மதன் கார்க்கி வசனங்களை எழுதுகிறார். நிசாத் யூசூப் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். ‘கங்குவா’ படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.