\
Suriya
SuriyaKaruppu

மெகா ஹிட் `கருப்பு'... சொகுசு கார் பரிசளித்த சூர்யா! | Karuppu | Suriya | Sai Abhyankkar

இப்படத்தில் ஜி.கே. விஷ்ணுவின் ஒளிப்பதிவு மற்றும் சாய் அபியங்கர் இசையும் பெரிதும் பாராட்டுகளை பெற்றுள்ளது. அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஒப்பிப்பதிவாளர் ஜி.கே. விஷ்ணு மற்றும் சாய் அபியங்கர் ஆகியோருக்கு சொகுசு கார் பரிசளித்துள்ளார் நடிகர் சூர்யா.
Published on
Summary

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த ‘கருப்பு’ படம் மே 15 வெளியீட்டிலிருந்து உலகளவில் 300 கோடி, இந்தியாவில் மட்டும் 200 கோடி வசூலித்து அவரது கரியரில் மிகப்பெரிய மைல்கல்லாகியுள்ளது. இந்த வெற்றிக்கு நன்றி தெரிவிக்க ஒளிப்பதிவாளர் ஜி.கே. விஷ்ணு மற்றும் இசையமைப்பாளர் சாய் அபயங்கருக்கு Mahindra BE6 Batman edition சொகுசு காரை பரிசளித்துள்ளார் சூர்யா.

சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள படம் `கருப்பு'. இப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ் எனப் பலர் நடித்துள்ளனர். மே 15ம் தேதி வெளியான படத்துக்கு வசூலும், வரவேற்பும் மிக பெரிய அளவில் கிடைத்துள்ளது. உலகளவில் கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதில் இந்திய வசூல் மட்டும் 200 கோடி ரூபாய். சூர்யா திரைப்பயணத்திலேயே மிகப்பெரிய வசூலை ஈட்டி ஒரு மைல்கல் படமாக அமைந்துள்ளது கருப்பு.

இப்படத்தில் ஜி.கே. விஷ்ணுவின் ஒளிப்பதிவு மற்றும் சாய் அபியங்கர் இசையும் பெரிதும் பாராட்டுகளை பெற்றுள்ளது. இப்போது அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஒப்பிப்பதிவாளர் ஜி.கே. விஷ்ணு மற்றும்  சாய் அபியங்கர் ஆகியோருக்கு சொகுசு கார் பரிசளித்துள்ளார் நடிகர் சூர்யா. Mahindra BE6 Batman edition என்ற காரை தான் சூர்யா பரிசளித்துள்ளார். இது முன்பதிவு செய்து பெரும் வகையிலான அதிக டிமாண்ட் உள்ள கார் என்பது கூடுதல் சிறப்பு. இந்த பரிசுக்கு நன்றி தெரிவித்து "Just God things! நன்றி, சூர்யா சார். உங்களுக்கு ஒரு பெரிய இதயம் இருக்கிறது!!!!" என்று பதிவிட்டிருந்தார் ஜி கே விஷ்ணு. சாய் அபியங்கர் "Love you சூர்யா சார்" எனப் பதிவிட்டுள்ளார்.

Suriya
"உண்மை என்னனு சொன்னா... " ஜனநாயகன் பற்றி பேசிய ஹெச் வினோத் | H Vinoth | Jana Nayagan

அட்லீயின் 'மெர்சல்' படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார் ஜி.கே. விஷ்ணு. அதைத் தொடர்ந்து 'பிகில்' படத்துக்கு ஒளிப்பதிவு செய்தார். இந்தியில் அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான் நடித்த 'ஜவான்' படத்துக்கும் ஒளிப்பதிவு இவரே. இப்போது கருப்பு படத்திலும் இவரது பணி பாராட்டை பெற்றுள்ளது. அடுத்து, அல்லு அர்ஜுன் நடிக்கும் 'ராக்கா' என்ற தனது புதிய திரைப்படத்தில், அவர் அட்லீயுடன் மீண்டும் இணைந்துள்ளார். சாய் அபியங்கரும் அடுத்து அட்லீ இயக்கும் படமான `ராக்கா'வில் பணியாற்றி வருகிறார். இதேவேளையில் இன்று மதுரையில் உள்ள பதினெட்டாம்படி கருப்ப சாமி கோவிலுக்கு மனைவி ஜோதிகாவுடன் சென்று தரிசனம் செய்திருக்கிறார் சூர்யா

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com