“கங்குவா கதை இப்படித்தான் இருக்கும்” - எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா? ஞானவேல்ராஜா பகிர்ந்த சுவாரஸ்யம்

சூர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் ‘கங்குவா’ திரைப்படம் பற்றி தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா புதிய தகவல்களை தெரிவித்துள்ளார்.
Kanguva Poster
Kanguva PosterTwitter

சிவா இயக்கத்தில் யுவி கிரியேஷன்ஸ், ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் இணைந்து தயாரித்து வரும் படம் கங்குவா. இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்துள்ளார். பெரும் பொருட்செலவில் உருவாகிவரும் கங்குவா படமானது அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது. கங்குவா படத்தின் Glimpse காட்சிகள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் எதிர்ப்பார்ப்பை எகிற செய்துள்ளது.

Kanguva Poster
Kanguva Poster

இந்நிலையில், இப்படம் குறித்து பல சுவாரஸ்ய தகவல்களை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, “கங்குவா திரைப்படமானது 14 ஆம் நூற்றாண்டை மையமாக கொண்டு கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் 20 சதவீதம் வரலாற்றையும் 80 சதவீதம் கற்பனையும் அடிப்படையாக கொண்டு பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது. பண்டைய காலகட்ட நடைமுறைகளான இறைவழிபாடுகள், கலாச்சாரம் போன்றவற்றை பிரதிபலிக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. கங்குவா என்பதற்கு நெருப்பில் இருந்து பிறந்தவன் என்று அர்த்தம்.

இப்படத்திற்காக இயக்குநர் சிவாவும் நிறைய மெனக்கெடல் செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் உட்பட மொத்தம் 10 மொழிகளில் இத்திரைப்படம் உருவாகி வருகிறது. அதனால், அந்ததந்த மொழிகளுக்கு ஏற்ப முக்கிய நடிகர்கள் பிண்ணனி குரல் தந்துள்ளது மிகுந்த எதிர்பார்ப்பை தரும். அதற்கேற்றவாறு டீசரும் தயாரிக்கப்பட்டு வருகிறது. பல மொழிகளில் வெளியாக இருப்பதால் அதற்கான வேலையும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. படம், ரசிகர்களுக்கு திருப்தி அளிக்கூடியதாக நிச்சயம் இருக்கும்.

gnanavel raja
gnanavel raja

படத்தின் முக்கிய காட்சிகள் 3D Vfx தொழில்நுட்பத்தில் தத்ரூபமாக கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் படத்திற்கான வேலைகள் அதிகளவில் இருக்கிறது. அனைத்து பணிகளும் முடிந்ததும் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை முழுமைப்படுத்தும் வகையில் படம் அமையும். மேலும் ரசிகர்களுக்கு முழுமையான திரையரங்கு அனுபவத்தையும் ஆச்சர்யத்தையும் கொடுத்து, அவர்கள் கொண்டாடும் வகையில் படம் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

- அரவிந்த்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com