Soori
SooriX

கிண்டல் பதிவுக்கு சூரியின் பக்குவமான பதில்! | Soori

அந்த வீடியோவை `எங்கள் ராஜாக்கூர் மண்ணின் மகிழ்ச்சியில், குடும்பத்தோடு தீபாவளி' எனக் குறிப்பிட்டு தன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்தப் பதிவில் பலரும் மகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
Published on

காமெடியனாக இருந்து இன்று ஹீரோவாக வளர்ந்து கலக்கிக் கொண்டிருப்பவர் நடிகர் சூரி. விடுதலை, கருடன், கொட்டுக்காளி, மாமன் போன்ற படங்களுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, அடுத்ததாக `மண்டாடி' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இதற்கிடையில், மதுரையில் இருக்கும் ராஜாக்கூர் கிராமத்தில் சூரி தன் குடும்பத்துடன் கொண்டாடிய தீபாவளி வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலானது. கிராமத்தில் இருக்கும் உறவினர்களுடன் அவர் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடினார். அந்த வீடியோவை `எங்கள் ராஜாக்கூர் மண்ணின் மகிழ்ச்சியில், குடும்பத்தோடு தீபாவளி' எனக் குறிப்பிட்டு தன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்தப் பதிவில் பலரும் மகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

அதில் ஒருவர் `திண்ணைல கிடந்தவனுக்கு திடுக்குன்னு வந்துச்சாம் வாழ்க்கை' எனக் கிண்டலாகப் பதிவிட்டிருந்தார். அதற்கு பதில் சொல்லும்படி``திண்ணையில் இல்லை நண்பா பல நாட்கள் இரவும் பகலும் ரோட்டில் இருந்தவன் நான்… அந்த பாதைகள் தான் எனக்கு வாழ்க்கையின் உண்மையும் மதிப்பையும் கற்றுத் தந்தது. நீயும் உன் வளர்ச்சியில் நம்பிக்கை வைத்து முன்னேறினா, வெற்றி நிச்சயம் உன்னைத் தேடி வரும்" எனப் பக்குவமாக பதிலளித்திருக்கிறார். அவரின் இந்த நாகரீகமான அணுகுமுறையை பலரும் இப்போது பாராட்டி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com