Sivakarthikeyan
SivakarthikeyanSeyon

சாமியாடியாக SK.. வெளியானது `சேயோன்' புரோமோ! | Seyon | Sivakarthikeyan

சிவக்குமாரின் முதல் படமான `தாய் கிழவி' பிப்ரவரி 27ம் தேதி வெளியாகவுள்ளது. அதன் வெளியீட்டு வேலை, வெளியீட்டுக்குப் பிறகான விளம்பர வேலைகள் எல்லாம் முடிந்த பிறகு `சேயோன்' படம் துவங்கப்பட உள்ளது.
Published on
Summary

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் 'சேயோன்' படத்தின் புரோமோ, அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. மதுரையை மையமாகக் கொண்டு, சாமியாடி கதாபாத்திரத்தில் சிவா நடித்திருப்பது போல ப்ரோமோ காட்டுகிறது. இயக்குநர் சிவக்குமாரின் முதல் படம் 'தாய் கிழவி' வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, 'சேயோன்' படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து உருவாகும் `சேயோன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான `பராசக்தி' படத்திற்கு பிறகு, சிவா நடிக்கும் படத்தை யார் இயக்கப் போவது என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. தற்போது இந்தப் படத்தை சிவக்குமார் முருகேசன் அந்த இடத்தை பிடித்துள்ளார். நேற்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில், இன்று இப்படத்தின் புரோமோவை சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ளனர்.

மதுரையின் உசிலம்பட்டி, செக்கானூரணி, கருமாத்தூர் சார்ந்த பகுதியை படத்தின் களமாக கொண்டும், படத்தில் சாமியாடி பாத்திரத்தில் சிவா நடித்திருப்பது போல இந்த ப்ரோமோ காட்டுகிறது. இயக்குநர் சிவக்குமாரின் முதல் படமான `தாய் கிழவி' படமும் கிராமம் சார்ந்த கதையே. இப்படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் தான். `தாய் கிழவி' படம் சிவாவுக்கு வெகுவாக பிடித்துப்போக தனக்கு ஏற்ற கதை இருக்கிறதா என சிவக்குமாரிடம் கேட்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். அந்தக் கதை சிவாவுக்கு பிடிக்க, உடனடியாக படத்தை ஒப்பந்தம் செய்து படத்தின் புரோமோவையும் ஷூட் செய்து, இப்போது வெளியிட்டுள்ளனர்.

Sivakarthikeyan
"மோடிதான் பிடித்த அரசியல்வாதி..." வைரலான நடிகை டாப்ஸியின் பதில்! | Taapsee Pannu | Modi

`ரெமோ' படத்துக்கு பின் சிவா படத்தில் இணைந்துள்ளார் சந்தோஷ் நாராயணன். அமரன் படத்தை தொடர்ந்து மறுபடி சிவகார்த்திகேயன் நடிக்கும் `சேயோன்' படத்தையும் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. சிவக்குமாரின் முதல் படமான `தாய் கிழவி' பிப்ரவரி 27ம் தேதி வெளியாகவுள்ளது. அதன் வெளியீட்டு வேலை, வெளியீட்டுக்குப் பிறகான விளம்பர வேலைகள் எல்லாம் முடிந்த பிறகு `சேயோன்' படம் துவங்கப்பட உள்ளது. மேலும் இப்படம் அக்டோபர் வெளியீடு என இப்போதே துண்டை போட்டுவிட்டனர். எனவே சிவாவின் அடுத்த படத்தை உடனடியாக எதிர்பார்க்கலாம்.

Sivakarthikeyan
"மோடிதான் பிடித்த அரசியல்வாதி..." வைரலான நடிகை டாப்ஸியின் பதில்! | Taapsee Pannu | Modi

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com