அரங்கு நிறையும் காட்சிகள்.. தொடரும் வசூல் வேட்டை: 3 நாட்களில் ‘மாவீரன்’ படம் இத்தனை கோடி வசூலா?

தமிழ்நாட்டில் மட்டும் 27.55 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது.
Maaveeran
MaaveeranTwitter

மடோன் அஸ்வின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், சரிதா, இயக்குநர் மிஷ்கின், யோகிபாபு, சுனில் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான திரைப்படம் ‘மாவீரன்’. கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 14 ஆம் தேதி) தமிழில் வெளியான அதேநேரத்தில், ‘மகாவீருடு’ என்றப் பெயரில் தெலுங்கிலும் இப்படம் வெளியானது.

சமூக பிரச்சனைகளை மையப்படுத்தி எடுத்து வரும் மடோன் அஸ்வின் இப்படத்திலும், அதனை கையாண்டிருந்த நிலையில் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. கூடுதலாக தமிழில் விஜய் சேதுபதியும், தெலுங்கில் ரவி தேஜாவும் பின்னணி குரல் கொடுத்திருந்தினர். படம் முழுக்க சிவகார்த்திகேயன் தன்னுடைய சிறப்பான நடிப்பால ஆடியன்ஸை ஹோல்ட் செய்திருக்கிறார். யோகி பாபு தன்னுடைய டைமிங் காமிடியில் அப்ளாஸ் அள்ளுகிறார். மிரட்டலான நடிப்பால் மிரட்டுகிறார் மிஷ்கின். அதிதி சங்கர், சரிதா, சுனில் உள்ளிட்ட ஒவ்வொருவரும் சிறப்பான நடிப்பையே வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

Maaveeran
Maaveeran

அரங்கு நிறையும் காட்சிகள்.. ரூ.50 கோடியை நோக்கி வசூல் வேட்டை!

இந்நிலையில், இப்படம் 3 நாட்களில் 42.11 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 27.55 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. இந்தாண்டு வெளியானப் படங்களில் தமிழ்நாட்டு அளவில் ‘துணிவு’, ‘வாரிசு’, ‘பொன்னியின் செல்வன் 2’ படங்களை அடுத்து ‘மாவீரன்’ படத்திற்கு 3 நாட்களிலேயே நல்ல வசூல் கிடைத்துள்ளது. இப்படம் இன்னும் சில தினங்களில் 50 கோடி ரூபாய் கிளப்பில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Maaveeran
“இங்கு எவ்வளவு செய்தாலும் பத்தல; விஜய் அண்ணாவும் செய்வது ரொம்ப மகிழ்ச்சி...” - கார்த்தி நெகிழ்ச்சி

கதை சுருக்கம்:

கார்ட்டுனீஸ்ட் வேலைக்காக போராடிக்கொண்டிருக்கும் சத்யாவுக்கு சப் எடிட்டர் நிலா மூலமாக அந்த வேலையே கிடைக்கிறது. அதே சமயம், சத்யா வாழும் குடியிருப்புப் பகுதியை காலி செய்யும் மாநகராட்சி அவரின் குடும்பத்தையும், அந்த ஏரியா மக்களையும் அடுக்குமாடி குடியிருப்பில் அமர்த்துகிறது. அங்கு எல்லாமே பிரச்னையாய் இருக்க, அதையே கன்டென்ட்டாக மாற்றி கார்ட்டூன் ஆக்குகிறார் சத்யா. புதிய குடியிருப்பின் பிரச்னைகள் அதிகமாக, பிரச்னையே வேண்டாம் என எல்லாவற்றுக்கும் ஒதுங்கிப் போகும் கோழை சத்யாவுக்கு ஒரு சக்தி கிடைக்கிறது. அந்த சக்தி என்ன, கோழை எப்படி மாவீரன் ஆனான் என்பதே மடோன் அஷ்வின் இயக்கியிருக்கும் மாவீரன்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com