Leo team-nandita swetha
Leo team-nandita swethaTwitter

‘லியோ’ தெலுங்கு விநியோக உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! #Top10Cinemanews

விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன்

1. ‘லியோ’ உரிமையை கைப்பற்றிய ‘வாத்தி’ நிறுவனம்

1. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், த்ரிஷா, ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜூன், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள திரைப்படம் ‘லியோ’. இப்படம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இதன் தெலுங்கு திரையரங்கு வெளியீட்டு உரிமையை சித்தாரா எண்டெர்டெயின்மெண்ட் கைப்பற்றியுள்ளது. தனுஷின் ‘வாத்தி’ படத்தை இரு மொழிகளிலும் இந்நிறுவனம் தான் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

2. ‘கங்குவா’ கிளிம்ப்ஸ் காட்சி எப்போது?

2. சூர்யா, திஷா பதானி ஆகியோர் நடிப்பில் ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் தயாராகி வரும் படம் ‘கங்குவா’. யுவி கிரியேஷன்ஸ், ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் இணைந்து தயாரிக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசைமையக்கிறார். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் இப்படம் 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், சூர்யாவின் பிறந்தநாள் வரும் 23 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு ‘கங்குவா’ படத்தின் கிளிம்ப்ஸ் காட்சிகள் அன்றைய தினம் வெளியிடப்படவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

3. பண்ணாரி அம்மன் கோயிலில் சமந்தா வழிபாடு

சமந்தா
சமந்தா

3. நடிகை சமந்தா ‘மயோசிடிஸ்’ என்னும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்த நோய்க்கு சிகிச்சை பெறும் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்திருந்தார். இதனைத் தொடர்ந்து உடல்நலம் பெறவேண்டி பல்வேறு கோயில்களுக்கு சென்று வரும் அவர், சத்தியமங்கலம் அருகேயுள்ள பண்ணாரி அம்மன் கோயிலுக்கு இன்று குடும்பத்துடன் வருகை தந்தார். அங்கு சமந்தா பெயரில் அர்ச்சனை செய்து பிரசாதம் வழங்கப்பட்டது. சாமி தரிசனம் செய்ததை தொடர்ந்து கோயில் நிர்வாகிகளுடன் அவர் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

4. கலைஞரை புகழ்ந்து தள்ளிய ஜெயம் ரவி

4. உலகத்தில் மிகச்சிறந்த டயலாக் சார்லி சாப்ளின் நடித்த படத்தில் வரக்கூடிய டயலாக் என்பார்கள்; ஆனால், நமக்கு பராசக்தி படத்தில் வந்த வசனம்தான் உலகத்தின் சிறந்த வசனம் என நடிகர் ஜெயம் ரவி தெரிவித்தார். பெரம்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

5. விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் கங்கனா

கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத்

5. நான்கு முறை தேசிய விருதுகளை வென்றவர் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத். ஜெயம் ரவியின் ‘தாம் தூம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், தொடர்ந்து ‘தலைவி’ படத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். மேலும் ராகவா லாரன்ஸின் ‘சந்திரமுகி 2’ படத்தில் கங்கனா நடித்துள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், விஜய் சேதுபதியுடன் ஒரு படத்தில் கங்கனா ரனாவத் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

6. விஜய் சேதுபதியுடன் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன்

6. மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், யோகி பாபு, சரிதா, மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாவீரன்’. இப்படம் 6 நாட்களில் 58 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்நிலையில், ‘மாவீரன்’ படத்தின் வெற்றிக்காக நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க விருப்பப்படுகிறேன் என்றும், விரைவில் அது நடக்கும் என்றும் தெரிவித்துள்ளார். ‘மாவீரன்’ படத்தில் விஜய் சேதுபதி சம்பளமே வாங்காமல் வாய்ஸ் ஓவர் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

7. சம்பளத்தை உயர்த்திய கீர்த்தி சுரேஷ்?

கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ்

7. ‘மாமன்னன்’ திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்ததை அடுத்து கீர்த்தி சுரேஷ் தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 2 கோடி ரூபாயிலிருந்து 3 கோடி ரூபாயாக அவர் சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தெரிகிறது.

8. Chill செய்யும் கமல்ஹாசன் - பிரபாஸ் - ராணா டகுபதி

8. நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே, திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘புராஜெக்ட் கே’. இப்படம் அடுத்த வருடம் வெளியாகவுள்ளது. ‘புராஜெக்ட் கே’ என்றால் என்ன என்பது குறித்த க்ளிம்ப்ஸ் காட்சிகள் அமெரிக்காவில் சாண்டியாகோ காமிக் கான் நிகழ்ச்சியில் இன்று வெளியிடப்பட உள்ளது. இதற்காக நடிகர் கமல்ஹாசன், பிரபாஸ், ராணா டகுபதி உள்ளிட்டோர் அமெரிக்கா சென்றுள்ள நிலையில், அங்கு உணவகம் ஒன்றில் மூவரும அமர்ந்து பேசும் புகைப்படம் வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது.

9. அரிய வகை நோயால் அவதிப்படும் நந்திதா

நந்திதா ஸ்வேதா
நந்திதா ஸ்வேதா

9. தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா. இவர், நடிகை சமந்தாவைப்போல் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். ஃபைப்ரோமியால்ஜியா என்னும் தசைநார் வலி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், இந்நோயால் அடிக்கடி உடல் எடை குறைவதுடன், கடினமான வேலைகளை செய்ய முடியவில்லை என்றும் கூறியுள்ளார். இப்பாதிப்பால் மூட்டு மற்றும் தசைகளில் வலி ஏற்படுவதுடன் நினைவுத்திறனும் பாதிப்பதாக அவர் கூறியுள்ளார்.

10. சூர்யாவுக்கு இவர்தான் வில்லனா?

நட்டி
நட்டி

10. சூர்யாவின் ‘கங்குவா’ படத்தில், ஒளிப்பாதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ் வில்லனாக நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. ‘கர்ணன்’, ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ உள்ளிட்டப் படங்களில் நட்டி வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com