Sirai
SiraiVikram Prabhu, LK Akshay Kumar

சிறை படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு! | Seven Screen Studio | Vikram Prabhu | LK Akshay Kumar

வெற்றிமாறனின் இணை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரம் பிரபு, அனந்தா, அனிஷ்மா ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
Published on

சசிக்குமார் நடித்த `அசுரவதம்' படத்தின் மூலம் தயாரிப்பில் களம் இறங்கியது  SS லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம். தொடர்ந்து விஜய் சேதுபதியின் `துக்ளக் தர்பார்', `காத்துவாக்குல ரெண்டு காதல்', விக்ரமின் `மஹான்', `கோப்ரா' விஜயின் `லியோ' போன்ற படங்களை தயாரித்தார். இப்போது இவரின் மகன் அக்ஷய் குமார் `சிறை' படம் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமாகிறார்.

வெற்றிமாறனின் இணை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரம் பிரபு, அனந்தா, அனிஷ்மா ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். `டாணாக்காரன்' இயக்குநர் தமிழ், தான் உண்மையில் சந்தித்த அனுபவத்தை வைத்து, இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். ஒரு காவலதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணமாக இப்படம் உருவாகியிருக்கிறது.

இப்படத்தின்  படப்பிடிப்பு முழுமையாக முடிந்து  இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. தற்போது `சிறை' டிசம்பர் 25ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர். விரைவில் டீசர், இசை மற்றும் டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com