ஏ ஆர் ரஹ்மானுக்காக `கொஞ்சம் நிலவு' பாடகி அனுபமா செய்த பாடல்! | Singer Annupamaa | A R Rahman
சந்திரலேகா அனுபமா, ஏ.ஆர்.ரஹ்மானின் 'கொஞ்சம் நிலவு' பாடலை மறு உருவாக்கம் செய்து, அவருக்கு பரிசாக வழங்கியுள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கடந்த 1993 ஆம் ஆண்டு வெளியான ‘திருடா திருடா’ படத்தில் இடம்பெற்ற “கொஞ்சம் நிலவு” பாடல் இன்றுவரை மிகப் பிரபலம். அந்தப் பாடலை பாடியவர் தான் சந்திரலேகா அனுபமா. அப்பாடலை தொடர்ந்து `பாய்ஸ்' படத்தில் Break the Rules, `கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் Signore Signore, `கஜினி' படத்தில் Rahathulla, `பாம்பே' படத்தில் பூவுக்கென்ன பூட்டு, `ரட்சகன்' படத்தில் மெர்க்குரி பூக்கள் உள்ளிட்ட பல பாடல்களை பாடினார்.
அனுபமா இசையமைப்பு, நடிப்பு ஆகியவற்றிலும் ஆர்வம் கொண்டிருப்பதால், அத்துறைகளில் தன்னை அதிகளவில் ஈடுபடுத்திக் கொண்டதால், திரைப்படங்களில் பாடுவதை குறைத்துக் கொண்டார். ஷங்கர் இயக்கத்தில் உருவான `ஜீன்ஸ்' படத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்த பாடல்களில் ஒன்று, படத்தின் காதல் தீமான, `நிசாரிசா'. இந்தப் பாடலை மறு உருவாக்கம் செய்து, அதை ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பரிசாக வழங்க உள்ளார் அனுபமா. ஏ.ஆர்.ரஹ்மான் மீது இசைக்கலைஞர்கள் கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்தும் நோக்கில் இப்பாடலை மறு உருவாக்கம் செய்து பாடியிருப்பதோடு, அதனை சிறந்த வீடியோவாகவும் உருவாக்கியிருக்கிறார்கள். இவர்களது இத்தகைய முயற்சியை அறிந்து பாராட்டு தெரிவித்துள்ளார் ரஹ்மான்.
இது குறித்து பாடகி சந்திரலேகா அனுபமா கூறுகையில், “ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு அற்புதமான மனிதர். அவர் அன்பும், பன்பும் நிறைந்த ஒரு மனிதர். அவர் பாலிவுட் திரையுலகம் குறித்து சொன்ன நேர்மையான உணர்வுகள் குறித்து எழுந்த சர்ச்சைகள் மற்றும் ட்ரோல்கள் மூலம் நாங்கள் மிகவும் வருத்தமடைந்தோம். எங்கள் சொந்த மெட்ராஸ் மொஸார்ட்டுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக இந்தப் பாடலை மறு உருவாக்கம் செய்துள்ளோம். விகாஷ் நாகராஜ் இயக்கத்தில் அழகியல் காட்சிகளோடு உருவாகியிருக்கும் இந்த வீடியோ பாடலை நியூ மியூசிக் New Music நிறுவனத்துடன் sky 9 Entertainment இணந்து தயாரித்துள்ளோம்.” என்று கூறியுள்ளார்.

