கொரோனா குமார் பட விவகாரம்: நீதிமன்றத்தில் சிம்பு பதில்!
நடிகர் சிம்புவை கதாநாயகனாக வைத்து கொரோனா குமார் படத்தை எடுக்க வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் திட்டமிட்டிருந்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு இதற்காக அட்வான்ஸ் தொகையானது நடிகர் சிம்புவிற்கு கொடுக்கப்பட்ட நிலையில், இன்னும் இப்படத்தை சிம்பு நடித்து முடிக்கவில்லை என்று வேல்ஸ் ஃபிலிம் தரப்பில் சிம்புவிற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில், தாங்கள் முன்பணமாக கொடுத்த 1 கோடி ரூபாயை திருப்பி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கையும் வைக்கப்பட்டது.
இதற்கு சிம்புவின் தரப்பில் நீதிமன்றத்தில் இன்று பதிலளிக்கப்பட்டுள்ளது. அதில், “2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி கையெழுத்தான நாளிலிருந்து ஒராண்டிற்குள் படப்பிடிப்பை எடுத்து முடிக்காவிட்டால் ரூ. 1 கோடி முன்பணத்தை செலுத்த தேவை இல்லை. என்மீது தவறு இல்லாததால் பணத்தை திருப்பி செலுத்த தேவை இல்லை” என்று தெரிவித்தார்.
இதனை கேட்ட நீதிபதி இவ்வழக்கைனை வரும் 6 ஆம் தேதிக்கு தள்ளிவைத்திருக்கிறார். இது குறித்து ஆலோசிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார். எனவே சிம்புவின் தரப்பு கருத்து ஏற்றுக்கொள்ளப்பட போகின்றதா? இல்லை நிராகரிக்கப்படப்போகின்றதா? என்று அக்.6தான் தெரியவரும்.