
நடிகர் அஜித்குமார் பல வருடங்களாக விளம்பரப்படங்களில் நடிக்காமல் இருந்தார். ஆனால் இப்போது மீண்டும் அவர் விளம்பரப் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார் எனவும், அதன் படப்பிடிப்புக்காக மலேசியா சென்றுள்ளார் எனவும் தகவல்.
`வேள்பாரி' நாவலை திரைப்படமாகும் முயற்சிகளில் இருந்த ஷங்கர், அப்படத்தை 2026 ஜூன் மாதம் துவங்க உள்ளதாகவும், பெரிய நட்சத்திர நடிகர் இதில் நடிக்கிறார் எனவும் தகவல்.
தனுஷ் தற்போது விக்னேஷ் ராஜா இயக்கிவரும் D54 படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவரின் `தேரே இஷக் மே' படம் சமீபத்தில் வெளியானதால், அதன் புரமோஷன்களில் கலந்து கொண்டார். இப்போது அந்த வேலைகள் முடிந்துவிட்டதால் மீண்டும் D54 படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.
கார்த்தி நடித்துள்ள `வா வாத்தியார்' பட இரண்டாவது பாடல் MuDhaLaLi வெளியீடு. இப்படம் டிசம்பர் 5 வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், டிசம்பர் 12ம் தேதி படம் வெளியாகும் என புது ரிலீஸ் தேதி அறிவிப்பு.
விமல் நடிப்பில் தினேஷ் கலைச்செல்வன் இயக்கியுள்ள `மகாசேனா' படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. படம் டிசம்பர் 12ம் தேதி வெளியாகவுள்ளது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி. தமிழில் விஜய் நடித்த `வாரிசு' படத்தை இயக்கினார். அடுத்ததாக இவர் சல்மான்கான் நடிக்கும் படத்தை இயக்குவதாக தகவல் உலவி வருகிறது.
தெலுங்கு காமெடி நடிகர் சத்யா ஹீரோவாக நடிக்கும் படம் `Jetlee'. Mathu Vadalara இரு பாகங்களை இயக்கிய ரிதேஷ் ராணா இப்படத்தை இயக்குகிறார். இன்று இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
ரோஷன் நடிப்பில் சந்தீப் ராஜ் இயக்கியுள்ள `Mowgli' படத்தின் டிரெய்லர் வெளியானது. படம் டிசம்பர் 12ம் தேதி வெளியாகவுள்ளது.
மோகன் லால் - தருண் மூர்த்தி கூட்டணி `துடரும்' படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணைந்துள்ளது.
அடூர் கோபாலகிருஷ்ணன் - மம்மூட்டி கூட்டணி `அனந்தரம்', `மதிலுகள்' மற்றும் `விதேயன்' படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக இணைகிறது. இப்படத்தை மம்மூட்டி தன் சொந்த தயாரிப்பு நிறுவனமான மம்மூட்டி கம்பெனி மூலம் தயாரிக்கிறார்.