விரைவில் ‘சூர்யவம்சம் 2!’ சரத்குமார் கொடுத்த ஸ்வீட் அப்டேட்!

சூர்யவம்சம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என்று நடிகர் சரத்குமார் அறிவித்துள்ளார்.

விரைவில் சூர்யவம்சம் 2 படப்பிடிப்பு தொடங்கும் என நடிகர் சரத்குமார் அறிவித்துள்ளார். சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்த சூர்யவம்சம் படம் வெளியாகி 26 ஆண்டுகள் நிறைவுடைந்துள்ளது. இதையொட்டி இரண்டாம் பாகத்தின் அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

சூர்யவம்சம்
சூர்யவம்சம்

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சரத்குமார், “கலைத்துறை பயணத்தில், காலங்கள் கடந்தும், தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்தும், இன்றளவும் அனைத்து தரப்பு ரசிகர்களின் சிந்தையிலும் நீங்காமல் நிறைந்திருந்து, கொண்டாடக்கூடிய சிறப்புவாய்ந்த குடும்பத் திரைப்படம் சூர்யவம்சம் வெளியாகி இன்றுடன் 26 ஆண்டுகள் ஆகின்றன.

கதாபாத்திரங்கள், வசனங்கள், பாடல்கள் என ஒட்டுமொத்த திரைப்படத்தையும் ரசித்து, மாபெரும் வெற்றியளித்து, ஆதரவளித்த அன்பர்களுக்கு நன்றி!” என குறிப்பிட்டுள்ளார்.

இத்துடன், சூர்யவம்சம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com