Santhanam
SanthanamLove Bite

சந்தானத்தின் புதிய படம் துவக்கம்! | Love Bite | Santhanam

இதில் சந்தானத்திற்கு ஜோடியாக அபர்ணா தாஸ் கதாநாயகியாக நடிக்கிறார். இப்போது இந்தப் படம் பூஜையுடன் இன்று துவங்கி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on

சந்தானம் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான `டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்'  படத்திற்கு பிறகு, அவர் நடிப்பில் அடுத்த படம் துவங்கப்படாமலே இருந்தது. கடந்த மே 9ம் தேதி சந்தானம் நடிக்கும் அடுத்த படமாக 'லவ் பைட்' படம் அறிவிக்கப்பட்டது. சதீஷ் நடிப்பில் உருவான 'கான்ஜூரிங் கண்ணப்பன்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான செல்வின் ராஜ் சேவியர் தான் இந்த 'லவ் பைட்' படத்தை இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

இதில் சந்தானத்திற்கு ஜோடியாக அபர்ணா தாஸ் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், வி.டி.வி. கணேஷ், ஆதித்யா கதிர், ஆனந்தராஜ், பிஜோர்ன் சுராவ், ராஜேந்திரன், முத்துகுமார், நிரோஷா ரெடின் கிங்ஸ்லி மற்றும் கல்கி ராஜா உள்ளிட்ட பலரும் இப்படத்தில் இணைந்துள்ளனர். இப்போது இந்தப் படம் பூஜையுடன் இன்று துவங்கி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தானத்தின் முந்தைய படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' போலவே, இந்தப் படமும் ஹாரர் காமெடி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸோம்பி ஜானரில் இருக்கும் என்ற அனுமானங்களை உள்ளது. இப்படத்தை முடித்த பிறகு அறிமுக இயக்குநர் சுதாமன் கிருஷ்ணா இயக்கும் பெயரிடப்படாத டைம்-லூப் திரில்லர் படத்திலும் அவர் கதாநாயகனாக நடிக்கிறார் சந்தானம். மேலும் சிம்பு - அஸ்வத் மாரிமுத்து இணையும் படத்திலும் சந்தானம் முக்கியமான பாத்திரத்தில் நடிப்பதாக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து அறிவித்துள்ளார்.

Santhanam
அன்று யாரும் நம்பவில்லை... இன்று தமிழ்நாட்டின் முதல்வர் ஜோசப் விஜய்! - ஆர் ஜே பாலாஜி | R J Balaji
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com