
ரஜினிகாந்த் - நெல்சன் கூட்டணியில் உருவாகிவரும் `ஜெயிலர் 2' படத்தின் ஷூட்டிங்கில் டிசம்பர் 2ம் தேதி மோகன்லால் இணைய உள்ளார் என தகவல்.
நடிகை சமந்தா - இயக்குநர் ராஜ் திருமணம் இன்று அதிகாலை கோவையில் நடைபெற்றது.
ரியோ ராஜ் நடிப்பில் உருவாகும் `RAMinLEELA' பட ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியானது. ராமசந்திரன் கண்ணன் இயக்கும் இப்படத்தில் வர்த்திகா நாயகியாக நடிக்கிறார்.
விபின் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் கீதா கைலாசம் நடித்துள்ள `அங்கம்மாள்' படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இப்படம் டிசம்பர் 5ம் தேதி வெளியாகவுள்ளது.
கௌதம் ராம் கார்த்திக், அஞ்சனா நேத்ரன், செல்வராகவன் நடிப்பில் அறிமுக இயக்குநர் தினா ராகவன் இயக்கும் படம் பூஜையுடன் துவக்கம். `டாடா' பட இயக்குநர் கணேஷ் கே பாபு இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக களம் இறங்குகிறார்.
ரவி தேஜா நடித்துள்ள `Bhartha Mahasayulaku Wignyapthi' படத்திலிருந்து முதல் சிங்கிள் Bella Bella பாடல் வெளியாகியுள்ளது.
ஆனந்த் தேவரகொண்டா, வைஷ்ணவி சைதன்யா நடித்துள்ள `EPIC - First Semester' பட டீசர் வெளியீடு. இப்படத்தை 90's வெப் சீரிஸ் மூலம் பெரிய வரவேற்பை பெற்ற ஆதித்யா ஹாசன் இயக்கியுள்ளார்.
தனுஷ், க்ரித்தி சனோன் நடிப்பில் ஆனந்த் எல் ராய் இயக்கி வெளியான `தேரே இஷக் மே' படம், இந்தியில் மட்டும் 3 நாட்களில் 50.95 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவிப்பு.
பிரபல பாலிவுட் இயக்குநர் வி சாந்தாராம் பயோபிக் அவரது பெயரிலேயே உருவாகிறது. சித்தார்த் சதுர்வேதி இப்படத்தில் சாந்தாராமாக நடிக்க அபிஜீத் ஷிரிஷ் தேஷ்பாண்டே இப்படத்தை இயக்குகிறார்.
கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகிவரும் `The Odyssey' படத்தின் Prologue (முன்கதை) வீடியோ டிசம்பர் 12ம் தேதி ஐமாக்ஸ் திரைகளில் வெளியாகும் எனவும், அது கிட்டத்தட்ட 6 நிமிடம் ஓடக்கூடிய வீடியோ எனவும் சொல்லப்படுகிறது. மேலும், படத்தின் டிரெய்லரும் டிசம்பர் 19ம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது. ஆனால், இவை இந்திய திரையரங்குகளில் வருமா என்பது பற்றி உறுதியான தகவல் ஏதும் இல்லை.