"என்னோட 5வது Indipendente Song இதுதான்..." - சாய் அப்யங்கர் அப்டேட் | Sai Abhyankkar
இந்திய சினிமாவின் தற்போதைய கவனத்தை குவித்துள்ள இளம் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் தான். `கட்சி சேர' பாடல் ஹிட்டுக்குப் பிறகு பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றவர், `ட்யூட்' படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பெரிய வரவேற்பை பெற்றார். அடுத்தாக சூர்யாவின் கருப்பு, அல்லு அர்ஜூன் - அட்லீ கூட்டணியில் உருவாகும் படம் என படு பிசியாக இருக்கிறார்.
இவர் சமீபத்தில் நிகழ்ந்த கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்டார். அங்கு தனது அடுத்த படங்கள் பற்றி கூறியுள்ளார். அதில் " `கருப்பு' சீக்கிரமே வர இருக்கிறது. தனுஷ் சார் படத்தில் பணியாற்ற காத்திருக்கிறேன், அதன் வேலைகள் துவங்கிவிட்டது, தனுஷ் சார் - ராஜ்குமார் சார் கூட்டணிக்காக ஸ்பெஷல் ஆல்பம் ஒன்றை செய்ய இருக்கிறேன். தனுஷ் சாருக்கு ஆடக்கூடிய பாடலும் இருக்கும், ரொமான்ஸ் பாடலும் இருக்கும். அல்லு அர்ஜூன் சார் படத்தின் கம்போசிங் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. என்னுடைய ஐந்தாவது இன்டிபென்டன்ட் சாங் மார்ச் 5ம் தேதி வருகிறது. அந்தப் பாடலின் பெயர் `பவழமல்லி'. இது ஒரு கல்யாண அதிர்வுகளை கொடுக்கும் பாடலாக இருக்கும்." என்றார்.
அடுத்ததாக ராகவா லாரன்ஸ் - நிவின் பாலி நடிக்கும் `பென்ஸ்', தனுஷ் - ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் உருவாகும் `D55', கார்த்தி - தமிழ் கூட்டணியில் உருவாகும் `மார்ஷல்' போன்ற படங்களும் சாய் அப்யங்கர் இசையில் தான் உருவாக்கவுள்ளது.

