Karuppu
KaruppuR J Balaji, Suriya

"தீபாவளிக்கு வர நினைத்தோம்... கருப்பு FIRST SINGLE!" - UPDATE தந்த ஆர் ஜே பாலாஜி | Suriya | RJB

பெரிய எதிர்பார்ப்பிலிருக்கும் ’கருப்பு’ படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் தள்ளிப்போனது.
Published on

சூர்யா நடிப்பில் ஆர் ஜே பாலாஜி இயக்கிவரும் படம் `கருப்பு'. இப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ், யோகிபாபு எனப் பலர் நடித்துள்ளனர். இதில் ஆர் ஜே பாலாஜியும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் சூர்யா பிறந்தநாளான ஜூலை 23ம் தேதி வெளியானது.

பெரிய எதிர்பார்ப்பிலிருக்கும் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் தள்ளிப்போனது. இது பற்றி இன்று நடைபெற்ற விருது விழா ஒன்றில் பேசிய ஆர் ஜே பாலாஜி "படம் ஏறக்குறைய முடிந்துவிட்டது. முதலில் இப்படத்தை தீபாவளிக்கு வெளியிடலாம் என நினைத்தோம். ஆனால் படத்தில் நிறைய சி ஜி காட்சிகள் செய்ய நேரம் தேவைப்படுவதால் முடியாமல் போனது.

என்னுடைய தயாரிப்பாளருக்கு படம் மிகவும் பிடித்துவிட்டது. படத்தின் முதல் சிங்கிள், தீபாவளிக்கு வெளியாகும். விரைவில் சூர்யா சார், தன் நடனத்தால் திரையை தீப்பிடிக்க செய்வார்" எனக் கூறியுள்ளார். தற்போது இப்படத்தின் வெளியீட்டு 2026 ஏப்ரல் மாதம் இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com