Rishab Shetty praised Ken and His Parents are Proud
Ken Karunas, Rishab ShettyYouth

கென்னை பாராட்டிய ரிஷப் ஷெட்டி.. நெகிழ்ச்சியில் பெற்றோர் கிரேஸ் - கருணாஸ்! | Youth | Ken Karunas

நீண்டகாலத்திற்குப் பிறகு ஒரு முழுப் படத்தையும் புன்னகையோடு ரசித்துப் பார்த்தேன். 'யூத்' திரைப்படம் காதல், நட்பு மற்றும் ஆழமான உணர்வுகளால் நிறைந்துள்ளது.
Published on

கென் கருணாஸ் இயக்கி, நடித்து வெளியான படம் 'யூத்'. இது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று ரூ.80 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. சினிமா பிரபலங்கள் சூர்யா, கார்த்தி, சிம்பு உள்ளிட்டோர் இப்படக்குழுவை நேரில் அழைத்து வாழ்த்தினர். சமீபத்தில் மம்மூட்டியும்கூட இப்படத்தை குறிப்பிட்டு ஒரு நிகழ்வில் பேசினார்.

கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி ரிஷப் ஷெட்டி "நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு முழுப் படத்தையும் புன்னகையோடு ரசித்துப் பார்த்தேன். 'யூத்' திரைப்படம் காதல், நட்பு மற்றும் ஆழமான உணர்வுகளால் நிறைந்துள்ளது. இது அனைத்துப் பெற்றோர்களுக்கும் சமர்ப்பிக்கப்பட்ட ஓர் அழகான படைப்பு.

Rishab Shetty praised Ken and His Parents are Proud
மகளின் கருத்துக்கு ஆதரவு குரல் கொடுத்த சத்யராஜ்! | Divya Sathyaraj | Marriage

கென் கருணாஸ், ஒரே ஆளாக இந்தப் படத்தை எழுதி, இயக்கி, மிக நேர்த்தியான நடிப்பையும் வழங்கியிருப்பது பாராட்டுக்குரியது. சூரஜ் வெஞ்சாரமூடு, தேவதர்ஷினி மற்றும் அந்த நண்பர்கள் பட்டாளம் என ஒவ்வொரு நடிகரும் மிக இயல்பாக நடித்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், ஒளிப்பதிவாளர் விக்கி என ஒட்டுமொத்தத் தொழில்நுட்பக் குழுவின் பணியும் அற்புதம். தம்பி கென், நீ சினிமா உலகிற்கு ஒரு சொத்து" எனக் குறிப்பிட்டு அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்தார்.

அதனைத் தொடர்ந்து, தற்போது கென் கருணாஸ் ரிஷப் ஷெட்டியை நேரில் சந்தித்த புகைப்படத்தைப் பகிர்ந்து,  "ரிஷப் ஷெட்டி சாரைச் சந்தித்தேன். 'உன்னால் முடியும், தொடர்ந்து முயற்சி செய்' என்று எனக்குள் ஏதோ ஒன்று சொல்வது போலவே இருந்தது. எனது கனவுகளை நனவாக்கிய 'யூத்' (Youth) படக்குழுவிற்கு நன்றி. கடவுளுக்கு நன்றி" எனப் பதிவிட்டிருக்கிறார்.

இன்ஸ்டாவில் இப்பதிவின் கமெண்டில் கென்னுடைய அம்மா கிரேஸ், "இந்தச் சிறப்பான தருணத்திற்காக இறைவனுக்கு நன்றி… கனவுகள், நம்பிக்கை, ஆசீர்வாதங்கள் அனைத்தும் ஒருங்கே." என கமெண்ட் செய்திருந்தார். மேலும் இந்தப் புகைப்படத்தை பகிர்ந்த கென்னுடைய தந்தையும் நடிகருமான கருணாஸ், "என் மகனை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்... மேலும், அவனது திறமையைக் கண்டறிந்த ரிஷப் ஷெட்டியை நான் உண்மையாகவே மதிக்கிறேன்" எனப் பதிவிட்டிருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com