\
Ravi Teja
Ravi TejaIrumudi Kattu

ரவிதேஜாவின் `இருமுடி கட்டு' க்ளிம்ப்ஸ் வெளியீடு! | Irumudi Kattu | Ravi Teja | Shiva Nirvana

ரவி தேஜா, இந்தப் படத்தில் தனது வழக்கமான மாஸ் அவதாரத்தை விட்டு விலகி, வித்தியாசமான கதாபாத்திரத்தில் தோன்றுகிறார்.
Published on

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரவி தேஜா. இவர் நடிப்பில் உருவாகி வரும் படம்  'இருமுடி கட்டு'. தெலுங்கில் `Ninnu Kori', `Majili', `Tuck Jagadish', `Kushi' போன்ற படங்களை இயக்கிய சிவா நிர்வாணா இப்படத்தை இயக்க, ‘புஷ்பா’, ‘குட் பேட் அக்லி’ மற்றும் ‘டியூட்’ போன்ற படங்களை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது.

அப்பா,மகள் பாசத்தை மையமாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான படமாக தயாராகிறது 'இருமுடி கட்டு'. ரவி தேஜா, இந்தப் படத்தில் தனது வழக்கமான மாஸ் அவதாரத்தை விட்டு விலகி, வித்தியாசமான கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். மகளை உயிராக நேசிக்கும் அன்பான அப்பா, கோபம் நிறைந்த மனிதர், தனது மகளின் வேண்டுகோளுக்கிணங்க மது பழக்கத்தை கைவிட்டு ஐயப்பனுக்கு மாலையிடுகிறார். அதன் பின் நடப்பவையே கதை.

இப்படத்தின் க்ளிப்ம்ஸ் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்தப் படம் மாஸ் மகாராஜா ரவி தேஜாவின் முதல் பைலிங்குவல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழிலும் ரவி தேஜாவுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் இருப்பதால் படம் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது.

Ravi Teja
கிரிக்கெட் + மல்யுத்தம் என்ன சொல்கிறான் 'பெத்தி'? | Peddi Review | Ram Charan | Janhvi Kapoor
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com