Vijay Devarakonda, Rashmika Mandanna
Vijay Devarakonda, Rashmika MandannaVirosh

"நான் சொல்ல விரும்புவது நிறைய இருக்கிறது.." - ராஷ்மிகாவின் நெகிழ்ச்சி பதிவு | Rashmika Mandanna

அன்பைப் பற்றி நான் சொல்லக்கூடியது எல்லாம், உங்களை விடுவிக்கும் ஒரு அன்பைக் கண்டுபிடியுங்கள்.
Published on
Summary

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா காதல் மற்றும் திருமணத்தைப் பற்றிய பதிவில், ராஷ்மிகா தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தியுள்ளார். அவர் தனது பயணத்தை நன்றியுடன் எதிர்கொண்டு, அன்பு விடுதலை தரும் என்பதை உணர்ந்ததாக கூறியுள்ளார். இது அவரது வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைப் பற்றிய நெகிழ்ச்சியான பதிவு.

இந்திய சினிமாவின் புதுமணத் தம்பதி விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா. `கீதா கோவிந்தம்', `டியர் காம்ரேட்' ஆகிய படங்களில் இணைந்து நடித்த இருவரும் சில வருடங்களாகவே காதலிப்பதாக தகவல்கள் பரவி வந்தன. 2024ல் இருந்து இருவருமே சில பேட்டிகளில், பதிவுகளில் தங்கள் துணையின் பெயரை குறிப்பிடாமல், காதலில் இருப்பதை மறைமுகமாக வெளிப்படுத்தி வந்தனர். இருவருக்கும் கடந்த அக்டோபர் மாதம் சத்தமே இல்லாமல், ஐதராபாத்தில் விஜய் தேவரகொண்டாவின் வீட்டில் நிச்சயதார்த்தமும் நடந்தது. தொடர்ந்து பிப்ரவரி 26 திருமணமும், மார்ச் 4ம் தேதி திருமண வரவேற்பும் நடைபெற்றது.

Vijay Devarakonda, Rashmika Mandanna
Vijay Devarakonda, Rashmika Mandanna

இந்த ஜோடிக்கு பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா இருவரும் ஒருவரை பற்றி ஒருவர் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர் அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து இந்த திருமணத்தின் சங்கீத் மற்றும் திருமண வரவேற்பு புகைப்படங்கள் வெளியானது, பலரும் அதனை பகிர்ந்தனர்.

இந்த நிலையில், ரஷ்மிகா - தேவரகொண்டா காதல் மற்றும் திருமணம் குறித்து, ``சிலநேரம் காதலுக்கான நேர்மைமிகு ஆதாரம், வியப்பு தான். ரஷ்மிகா மற்றும் தேவரகொண்டாவை பார்க்கையில் எனக்கு அதுதான் நினைவுக்கு வருகிறது" எனக் குறிப்பிட்டு தான் எழுதிய கட்டுரை ஒன்றை பகிர்ந்திருந்தார்.

Vijay Devarakonda, Rashmika Mandanna
பிரியாணி Vs படம்.. வைரலான கென் கருணாஸ் பதில்! | Ken Karunaas | Youth | Biriyani | Movie

அந்தப் பதிவுக்கு பதிலளித்த நடிகை ரஷ்மிகா "நீண்ட காலமாக என்னைப் பற்றி எழுதப்பட்ட ஒன்றைப் படித்து இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டதில்லை. நான் சொல்ல விரும்புவது நிறைய இருக்கிறது, ஆனால் என்னால் சொல்ல முடிவது மிகக் குறைவானவையே. நான் என் சொந்த அறையைக் கண்டுபிடித்து வருகிறேன், அது ஒரு பயணம், அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.. அதை அங்கீகரித்ததற்கு நன்றி.. அன்பைப் பற்றி நான் சொல்லக்கூடியது எல்லாம் - உங்களை விடுவிக்கும் ஒரு அன்பைக் கண்டுபிடியுங்கள்." என குறிப்பிட்டுள்ளார்.

Vijay Devarakonda, Rashmika Mandanna
"என் அண்ணன், அப்பாவை சாலை விபத்தில் இழந்தேன்!" - ஜூனியர் என்டிஆர் உருக்கம் | NTR

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com