rashanth Neel - Jr NTR Movie get a release date
Prashanth Neel, Jr NTRNTRNEEL

பிரஷாந்த் நீலின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு! | Prashanth Neel | Jr NTR

RRR படத்திற்குப் பிறகு தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடித்த `Devara: Part 1' படம் ஹிட் ஆனாலும் விமர்சன ரீதியாக எதிர்வினைகளை சந்தித்தது. ஹ்ரித்திக் ரோஷனுடன் இணைந்து இந்தியில் நடித்த `War 2' படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
Published on

KGF படத்தின் மூலம் இந்திய சினிமா முழுவதும் கவனிக்கப்பட்டவர் பிரஷாந்த் நீல். KGF இரு பாகங்கள் பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் `சலார்' படம் இயக்கினார். இப்போது ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.

RRR படத்திற்குப் பிறகு தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடித்த `Devara: Part 1' படம் ஹிட் ஆனாலும் விமர்சன ரீதியாக எதிர்வினைகளை சந்தித்தது. ஹ்ரித்திக் ரோஷனுடன் இணைந்து இந்தியில் நடித்த `War 2' படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனவே இப்போது ஹிட் கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஜூனியர் என்டிஆர், பிரஷாந்த் நீல் இயக்கும் படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார்.

2024இல் பூஜை போடப்பட்டு 2025இல் இதன் படப்பிடிப்புகள் துவங்கியது. இடையிடையே சில தாமதங்கள் காரணமாக நின்று நின்று படப்பிடிப்பு நடந்தது. இப்படத்திற்கு ’டிராகன்’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் செல்லப்படுகிறது. தற்போது இந்தப் படம் 2027 ஜூன் 11 வெளியாகும் எனவும், படத்தின் க்ளிம்ப்ஸ் ஜூனியர் என்டிஆர் பிறந்த நாளான மே 20 வெளியாகும் எனவும் அறிவித்துள்ளனர்.

rashanth Neel - Jr NTR Movie get a release date
”போயஸ் கார்டன்ல வீடு வாங்க கூடாதா..” தனது வைரல் மீம் குறித்து பதில் சொன்ன தனுஷ்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com