அதிரடிக்கு தயாராகும் ரஜினி ரசிகர்கள் - இன்று மாலை வெளியாகிறது ஜெயிலர் படத்தின் முதல் பாடல் ப்ரோமோ

நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் பட அப்டேட்டை பட குழு வெளியிட்டுள்ளது.
Jailer Movie poster
Jailer Movie poster@Sun TV You tube

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' திரைப்படம் தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில் தயாராகியுள்ள இப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து, மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உட்பட பிரபல நட்சத்திரங்கள் பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஜெயிலர் படப்பிடிப்பு நிறைவு
ஜெயிலர் படப்பிடிப்பு நிறைவு

இதற்கிடையில், கடந்த மாதம் ஜெயிலர் படப்பிடிப்பு நிறைவடைந்தையடுத்து பட குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். அதன்பின் எந்தவொரு அப்டேட்டும் வெளிவராத நிலையில், படம் வெளிவர இன்னும் 38 நாட்களே உள்ளது என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுப்பி வந்தனர்.

இந்நிலையில், தற்பொழுது ஒரு புது அப்டேட் வெளியாகி உள்ளது. ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் விதத்தில் கடந்த சனிக்கிழமையன்று சன் பிக்சர்ஸ் நிறுவனம், இசையமைப்பாளர் அனிருத்திடம் ‘அந்த ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போ ’ என்று ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி இருந்தனர். அதற்கு பதிலளித்த அனிருத் இன்னும் நான்கு நாட்கள் உள்ளது என்பதை குறிக்க அண்ணாமலை படத்திலிருந்து ரஜினிகாந்த் நான்கு விரல்கள் மட்டும் காட்டும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு, "தலைவர் ரஜினிகாந்த் என்ட்ரி, ஜெயிலர் ஃபர்ஸ்ட் சிங்கிள்" என்று அந்தப் புகைப்படத்திற்கு கேப்ஷன் இட்டு இருந்தார். இது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் தூண்டியிருந்தது.

Rajini in annamalai movie
Rajini in annamalai movie

மேலும், நேற்று அனிருத் இடம்பெறும் வகையில், ஒரு புதிய ப்ரோமோவை சன் பிக்சர்ஸ் தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தது. அதில், படத்தின் ‘ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ’ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவித்திருந்தது. அத்துடன் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் வெளியான ‘டாக்டர்’ மற்றும் ‘பீஸ்ட்’ படத்தில் பாடலை வெளியிடும் முன் ஒரு ஜாலியான ப்ரோமோவை வெளியிடுவார்கள்.

அதேபோல் ஜெயிலர் திரைப்படத்திற்காகவும் வெளியிட்டுள்ளனர். அந்த ப்ரோமோவில் படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமாரிடமிருந்து, இசையமைப்பாளர் அனிருத்-க்கு தொலைபேசி அழைப்பு வருவது போன்றும், அப்போது அனிருத் ​​வீடியோ கேம்களை விளையாடுவதும் போன்றும், அதன்பிறகு அனிருத் அழைப்பைத் தவிர்த்துவிடுவது போன்றும் அந்தப் ப்ரோமோ வெளியாகியிருந்தது.

அத்துடன் தனது பக்கத்தில் அமர்ந்து தன்னுடன் வீடியோ கேம் விளையாடுபவரிடம் ‘ஜெயிலர் பட ப்ரோமோவைப் பற்றி நெல்சன் கேட்பதற்காக தான் அவர் கூப்பிடுகிறார் என்று அனிருத் சொல்வது போன்றும், ‘நாளை பார்த்துக்கொள்கிறேன்’ என்று அனிருத் சொல்வதை போல் ஜாலியான ப்ரோமோ வெளியானது. இந்த ப்ரோமோவை ‘ஃபர்ஸ்ட் சிங்கள் ரெடி, அறிவிப்பு ப்ரோமோ ரெடி, ப்ரோமவுக்கு ப்ரோமோவும் ரெடி’ என்ற கேப்ஷனுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் சன் பிக்சர்ஸ் நேற்று வெளியிட்டது.

anirudh mobile wallpaper
anirudh mobile wallpaper

இந்த ப்ரோமோவில் நெல்சன் அழைக்கும் போது, அனிருத் தனது கைப்பேசியில் ரஜினிகாந்தின் புகைப்படத்தை வால் பேப்பராக வைத்திருக்கிறார். மேலும், அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் இரண்டாவது வால் பேப்பராக ‘சூப்பர் ஸ்டர் லோகோவை’ வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com