வெளியானது ‘ஜெயிலர்’ முதல் பாடலின் ப்ரோமோ வீடியோ!

‘ஜெயிலர்’ படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி வெளியாக உள்ளதாக சிறு டீசருடன் அதிகாரப்பூர்வமாக படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது.
Jailer first single promo
Jailer first single promoTwitter

‘அண்ணாத்தே’ படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’. நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரெடின் கிங்ஸ்லி, ரம்யா கிருஷ்ணன், விநாயகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஜெயிலர் படப்பிடிப்பு நிறைவு
ஜெயிலர் படப்பிடிப்பு நிறைவு

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, எண்ணூர், கடலூர், ஹைதராபாத், ராஜஸ்தான், மங்களூரு உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்த நிலையில், அண்மையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டிய புகைப்படங்களும் வெளியாகி வைரலாகின. ‘ஜெயிலர்’ படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி வெளியாக உள்ளதாக சிறு டீசருடன் அதிகாரப்பூர்வமாக படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடல் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் காத்திருந்தனர். அவர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தற்போது ‘ஜெயிலர்’ முதல் பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

முன்னதாக முதல் பாடலின் ப்ரோமோ வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ஒரு மணிநேரம் தாமதமாகும் என்று, அதாவது 7 மணியளவில் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ப்ரோமோவின்படி, இப்பாடல் தமன்னாவுக்கான Dance Number என தெரிகிறது. அனிருத் இசையில் உருவாகும் இப்பாடலை பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் எழுதுகிறார். முழு பாடல், ஜூலை 6-ம் தேதி வெளியாகும் என இந்த வீடியோ மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது!

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com