ரஜினிகாந்த் - நெல்சன் கூட்டணி மீண்டும் இணைகிறதா? | Rajini | Nelson
ஜெயிலர் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ரஜினிகாந்த் - நெல்சன் திலீப்குமார் கூட்டணி ஜெயிலர் 2 படத்தில் இணைந்திருக்கிறது. அப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. தற்போது ஆன்மிக பயணமாக இமயமலை சென்றிருக்கிறார் ரஜினி. அவர் திரும்ப வந்ததும் மீதமுள்ள காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. இதன் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் நிறைவடையவுள்ளது. படம் அடுத்த ஆண்டு ஜூன் 12ம் தேதி வெளியாகவுள்ளது.
இப்போது விஷயம் என்ன என்றால், ரஜினிகாந்த் - நெல்சன் திலீப்குமார் கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணைய உள்ளது என சொல்லப்படுகிறது. ஜெயிலர் 2 படப்பிடிப்பின் போது ரஜினிக்கு நெல்சன் ஒரு கதையை சொன்னதாகவும், அது ரஜினிக்கு பிடித்துப் போக, நாமே இதனை செய்யலாம் எனக் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்த் அடுத்ததாக கமல்ஹாசனுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளார். தற்போது ஜெயிலர் 2 வேலைகளில் பரபரப்பாக இருக்கும் நெல்சனுக்கு அடுத்ததாக ஜூனியர் என் டி ஆர் பட கமிட்மென்ட் இருப்பதாக சொல்லப்படுகிறது. இருவரும் தங்கள் அடுத்த படங்களை முடித்துவிட்டு வந்து, இந்தப் படத்தை துவங்குவார்கள் என சொல்லப்படுகிறது. ஆனால் இது பற்றி உறுதியான தகவல் எதுவும் இல்லை. இந்த தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் ரசிகர்களுக்கு செம ட்ரீட் என்பது மட்டும் உறுதி.