Padayappa, Suriya 47, D54, Dhurandhar
Padayappa, Suriya 47, D54, DhurandharTop 10 Cinema News

`படையப்பா' ரஜினி பேட்டி to SURIYA 47 PROMO | இன்றைய டாப் 10 சினிமா செய்திகள் | Top 10 Cinema News

இன்றைய சினிமா செய்திகளில் `SURIYA 47', 'D54', `படையப்பா' ஸ்பெஷல் வீடியோ உட்பட பல சுவையான டாப் 10 சினிமா செய்திகள் இடம்பெற்றுள்ளது.

1. `படையப்பா' ஸ்பெஷல் வீடியோ

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான படம் `படையப்பா'. தற்போது அவரது பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி இப்படம் மறுவெளியீடு செய்யப்பட உள்ளது. இந்த சூழலில் அதற்காக ஒரு ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்டுள்ளார் ரஜினிகாந்த்.

2. SURIYA 47 PROMO SHOOT

Suriya 47
Suriya 47

சூர்யா - ஜித்து மாதவன் கூட்டணியில் SURIYA 47 படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. இன்று இப்படத்தின் புரோமோ படப்பிடிப்பை துவங்கியுள்ளனர். மேலும் இந்தப் படத்தில் சூர்யா போலீஸ் ஆக நடிக்கிறார் என சொல்லப்படுகிறது. 

3. `D54' UPDATE

தனுஷ் நடிப்பில் விக்னேஷ் ராஜா இயக்கிவரும் `D54' படத்தில் தன்னுடைய காட்சிகள் நிறைவடைந்தது என நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு பதிவு.

4. 'ஹேப்பி ராஜ்' ஃபர்ஸ்ட் லுக்

ஜி வி பிரகாஷ் நடித்துள்ள 'ஹேப்பி ராஜ்' பட ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் துல்கர் சல்மான்.

5. சிரஞ்சீவி பட பாடல்

அனில் ரவிப்புடி இயக்கத்தில் சிரஞ்சீவி - நயன்தாரா நடித்துள்ள `Mana Shankara Vara Prasad Garu' படத்திலிருந்து சசிரேகா பாடல் வெளியாகியுள்ளது.

6. 'மஞ்சும்மல் பாய்ஸ்' இயக்குநரின் அடுத்த படம்

Balan
Balan

'மஞ்சும்மல் பாய்ஸ்' பட இயக்குநர் சிதம்பரம் அடுத்து இயக்கியுள்ள `பாலன்' படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்தது. இப்படத்திற்கு `ஆவேஷம்' ஜித்து மாதவன் திரைக்கதை எழுதியுள்ளார்.

7. Dhurandhar 2 Update

Dhurandhar
Dhurandhar

ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர்சிங் நடித்து வெளியாகி மிகப்பெரிய ஹிட்டாக மாறியுள்ளது `துரந்தார்'. இரண்டாம் பாகத்துக்கான டீசருடன் இப்படம் நிறைவடைந்தது. `துரந்தார் 2' மார்ச் 19, 2026 வெளியாகும் என அறிவிப்பு.

8. KICK 2 UPDATE

Kick
Kick

தெலுங்கில் வெளியான `கிக்' படத்தை அதே பெயரில் இந்தியில் ரீமேக் செய்து நடித்தார் சல்மான் கான். சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் "அடுத்ததாக `கிக் 2' படத்தில் நடிப்பதற்கான வேலைகளை செய்து வருகிறேன்" என தெரிவித்துள்ளார். தற்போது `Battle of Galwan' படத்தில் நடித்து வருகிறார் சல்மான் கான்.

9. `Haiwaan' படப்பிடிப்பு நிறைவு.

Haiwaan
Haiwaan

ப்ரியதர்ஷன் இயக்கத்தில் அக்ஷய்குமார், சைஃப் அலிகான் நடிப்பில் இயங்கிவந்த `Haiwaan' படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்தது.

10. The Boys கடைசி சீசன் டிரெய்லர்

மிகப்பிரபலமான வெப் சீரிஸ் `The Boys' ஐந்தாவது மற்றும் கடைசி சீசனின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 8ம் தேதி இந்த சீரிஸ் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com